
கடந்த 19ம் தேதி அறிவித்து அதற்கு மறுநாளான 20ம் தேதியிலிருந்து பேருந்து கட்டணத்தை அரசு உயர்த்தியது. சுமார் 50%லிருந்து 100% வரை பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தினக்கூலி மற்றும் மாத ஊதியதாரர்கள் கடுமையான நிதிநெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.
பேருந்து கட்டண உயர்வை கண்டித்தும் அதை திரும்பப்பெற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் பல இடங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளும் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் வகுப்புகளை புறக்கணித்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
திடீரென பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அரசின் இந்த நடவடிக்கை, பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="ta" dir="ltr">பஸ் கட்டண உயர்வை ஏழைகளின் அரசாங்கமாக இருந்தால் தடுக்க ஆவனவெல்லாம் செய்திருக்கும். முடிவெடுத்துவிட்டு கருத்து கேட்பது அரசியல் சாதுர்யம். முன்பே கேட்டிருந்தால் நல்ல நிவாரணம் சொல்லும் வல்லுனர்கள் அரசுப் பணியிலேயே உள்ளனர். அரசாள்பவர் கேட்டால்தானே!</p>— Kamal Haasan (@ikamalhaasan) <a href="https://twitter.com/ikamalhaasan/status/955837835759648768?ref_src=twsrc%5Etfw">January 23, 2018</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>