போயஸ் கார்டன் வீட்டில் ரஜினிகாந்துடன் கமல்ஹாசன் சந்திப்பு!!

Asianet News Tamil  
Published : Feb 18, 2018, 02:47 PM ISTUpdated : Sep 19, 2018, 01:58 AM IST
போயஸ் கார்டன் வீட்டில் ரஜினிகாந்துடன் கமல்ஹாசன் சந்திப்பு!!

சுருக்கம்

kamal meet rajinikanth in his poes garden house

அரசியல் களத்தில் தீவிரமாக செயல்படத் தொடங்கிவிட்டார் கமல். வரும் 21ம் தேதி ராமேஸ்வரத்தில் கட்சியின் பெயரை அறிவித்து அரசியல் பயணத்தை தொடங்க உள்ளார் கமல்.

இதற்கிடையே கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வது, ஆதரவைத் திரட்டுவது, தனது திட்டங்களை மக்களிடத்தில் சேர்ப்பது என பல பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

அரசியலில் ஈடுபடப்போவதாக கூறும் ரஜினிகாந்த், அரசியல் ரீதியான மற்றும் தமிழகத்தின் பிரதான பிரச்னைகள் குறித்த கருத்துகளையும் தவிர்த்து வரும் நிலையில், அனைத்து பிரச்னைகள் குறித்தும் நெற்றியடி கருத்துகளை தெரிவித்துவருகிறார் கமல்.

அரசியல் பயணத்தை தொடங்க உள்ள கமல், அண்மையில் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷனை அவரது இல்லத்தில் சென்று கமல் சந்தித்து பேசினார். அதன்பிறகு கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை சந்தித்து பேசினார்.

இந்நிலையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டில் அவரை சந்தித்து கமல் பேசியுள்ளார். இருவரும் அரசியல் களத்திற்கு வர உள்ள நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இருவரும் சேர்ந்து செயல்படுவது குறித்து காலம்தான் முடிவு செய்யும் என இருவருமே தெரிவித்து வருகின்றனர்.

வரும் 21ம் தேதி அரசியல் கட்சியின் பெயரை அறிவித்து அரசியல் பயணத்தை தொடங்க உள்ள கமல், ரஜினியை சந்தித்து பேசியுள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

SIR ஜனநாயகத்துக்கே அச்சுறுத்தல்.. நாடாளுமன்றத்தில் கர்ஜித்த கமல்ஹாசன்.. அதிர்ந்த ஆளுங்கட்சி!
அஜித் பவார்: வெறும் 5 நாட்கள் முதல் 2.5 ஆண்டுகள் வரை பதவி. 6 முறை து.முதல்வர்..! அரசியலின் தாதாவானது எப்படி..?