
அமைச்சர் சேவூர் ராமச்ந்திரன், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். எடப்பாடி பழனிசாமி அரசு தொடர்ந்து செயல்பட வேண்டி ஏழுமலையானை தரிசனம் செய்ததாக சேவூர் ராமசந்திரன் கூறினார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார். ஏழுமலையானை தரிசித்த பின்னர், அமைச்சர் சேவூர் ராமசந்திரன், செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக திருப்பதி ஏழுமலையானிடம் பிரார்த்தனை செய்ததாக கூறினார்.
கோயில்களில் ஏற்படும் தீ விபத்துகள் குறித்து, செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, கோயில்களில் ஏற்படும்தீ விபத்துகள் மற்றும் கோயில்களின் பாதுகாப்பு குறித்த ஆய்வு செய்ய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்து மக்களை அச்சமடைய வைத்துள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.