‘மத்திய சிறைச்சாலை மார்க்கெட் பிளாசாவாக மாற்றப்படும்’... கோவை தெற்கிற்கு கமல் வெளியிட்ட தனி தேர்தல் அறிக்கை!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 24, 2021, 6:53 PM IST
Highlights

தன்னுடைய தொகுதிக்கு என சிறப்பான 25 உறுதி மொழிகள் அடங்கிய  பிரத்யேக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். 

ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் விஜபி தொகுதியான கோவை தெற்கில் களமிறங்கியுள்ள கமல் ஹாசன், தன்னுடைய தொகுதிக்கு என சிறப்பான 25 உறுதி மொழிகள் அடங்கிய  பிரத்யேக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. 


1. அனைத்து வார்டுகளிலும் எம்எல்ஏ அலுவலகம் அமைக்கப்படும். இவை 24 மணி நேர மக்கள் குறை தீர்ப்பு மையங்களாக செயல்படும். 

2. நீண்ட நாட்களாக பட்டா இன்றி வசிக்கம் மக்களுக்கு இலவச நில பட்டா வழங்கப்படும்.

3. மத்திய சிறைச்சாலை ஊருக்கு வெளியே மாற்றப்பட்டு, அந்த இடத்தில் மக்கள் வசதிக்காக ஒருங்கிணைந்த மார்க்கெட் பிளாசா அமைக்கப்படும். 

4. காந்திபுரம் கிராஸ் கட் ரோடு, 100 அடி சாலை, டவுன் ஹால், ஒப்பக்காரவீதி ஆகிய இடங்களில் சுரங்க நடைப்பாதை அமைக்கப்படும்.

5. தங்கநகை உற்பத்தியாளர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும் 

6. தொகுதி முழுக்க 6 அடி ஆழத்தில் பாதாள சாக்கடை வசதி செய்து தரப்படும்.

7. தொகுதியில் அரசு இரத்த வங்கி அமைக்கப்படும். 

8. ஆதரவற்ற முதியோருக்களுக்கான இல்லம் அமைத்து தந்து அவர்களுக்கு உணவு வழங்கப்படும். மருத்துவ காப்பீடும் செய்து தரப்படும்.

9. அனைத்து வார்டுகளிலும் உடற்பயிற்சி கூடம் மற்றும் நூலகங்கள் அமைக்கப்படும். 

10. கந்து வட்டி முழுமையாக ஒழிக்கப்படும். சிறு, குறு தொழில்முனைவர்களுக்கு நியாயமான வட்டியில் கடன் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

11. அனைத்து வார்டுகளிலும் இலவச சட்ட சேவை மையங்கள் அமைக்கப்படும்.

 12. பிளாஸ்டிக் பயன்பாடு ஒழிக்கப்படும். நீர், நெகிழி மற்றும் மின் கழிவுகளை மறுசுழற்சி முறையில் பயன்படுத்த குடிசைத் தொழில்கள் மற்றும் சுய உதவிக்குழக்கள் ஊக்குவிக்கப்படும். 

13. கிராஸ்கட் ரோடு உள்ளிட்ட வர்த்தக சாலைகளில் சோலார் சாலைகள் அமைக்கப்படும். 

14. அனைத்து வார்டுகளிலும் திறன் மேம்பாட்டு முகாம்கள் அமைக்கப்படும்.

15. தொகுதி முழுக்க சுத்தமான குடிநீர் சீரான விநியோகத்தில் கிடைப்பது உறுதி செய்யப்படும். 

16. அனைத்து வார்டுகளிலும் தெரு விளக்குகள் சரியாக செயல்படுவது உறுதி செய்யப்படும். 

17. ஆத்தமான சுகாதாரமான கோவையாகத் திகழ அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். திடக்கழிவு மேலாண்மை உறுதி செய்யப்படும். 

18. அரசின் சேவைகள் வீடு தேடி வரும். 

19. அம்பேத்கார் விடுதி மற்றும் அரசு பள்ளிகளில் சுகாதாரமான குடிநீர் மற்றும் கழிவறை வசதி, கழிவுநீர் மேலாண்மை வசதி செய்து தரப்படும். ஆதரவற்ற இல்லங்களில் பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

 20. போட்டி தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கும் இலவச மையங்கள் அமைக்கப்படும். 

21. போக்குவரத்து நெரிசல் குறைய நடவடிக்கை எடுக்கப்படும். பாலம் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க ஏற்பாடு செய்யப்படும். 

22. அமைப்புசாரா தொழிலாளர்களின் நலன்கள் பேணப்படும். 

23. அரசாங்கம், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பொது இடங்களில் பெண்களுக்கான சிறப்பு உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தரப்படும். 

24. பொது மக்களின் பங்களிப்போடு நீர் நிலைகள் முறையாகப் பராமரிக்கப்படும். 

25. ஒவ்வொரு அரசு பள்ளிகளிலும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் பள்ளிக்கல்வி முடித்த மாணவ மாணவியரை உட்படுத்தி மாணவர் நண்பர்கள் அமைப்பு உருவாக்கப்படும்.

click me!