கேரள முதலமைச்சரைச் சந்தித்த 'நம்மவர்'...!

Asianet News Tamil  
Published : May 20, 2018, 04:59 PM ISTUpdated : Sep 19, 2018, 02:23 AM IST
கேரள முதலமைச்சரைச் சந்தித்த 'நம்மவர்'...!

சுருக்கம்

kamal hassan meets kerala cm pinrayi vijayan

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் இன்று சந்தித்து பேசினார்.  கேரள மாநிலம் கொச்சியில் அவர்களது சந்திப்பு நடைபெற்றது.



கேரளாவில் இன்று மாலை நடக்கவிருக்கும் தனியார் தொலைக்காட்சி விருது விழாவில் கலந்து கொள்வதற்காக மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான
கமல்ஹாசன் கேரளா சென்றுள்ளார். 

விழா, மாலை நடைபெறுவதால், அதற்கு முன்னதாக இன்று மதியம் கேரள முதல்வர் பினராயி விஜயனை அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தற்போதைய அரசியல் குறித்தும், காவிரி பிரச்னை குறித்தும் இருவரும் பேசியதாக தெரிகிறது. 

நீட் தேர்வு எழுதுவதற்காக கேரள சென்ற மாணவர்களுக்கு உதவியதற்கான முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கமல்  நன்றி தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

மீண்டும் அதிமுகவில் சசிகலா?! சின்னம்மாவுக்கு கவுரவ பதவி வழங்கி எல்லாத்தையும் சரிகட்டும் இபிஎஸ்!
டப்பா எஞ்சின்.. யார் யாருக்கு தலைமை-னு தெரியல.. மோடி, EPS-ஐ கலாய்த்த முதல்வர் ஸ்டாலின்