அதிமுக கூட்டணியில் கமல்ஹாசன்... அமைச்சர் ஜெயகுமார் அதிரடி விளக்கம்!

By Thiraviaraj RMFirst Published Feb 18, 2019, 11:38 AM IST
Highlights

மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளார் கமல்ஹாசன். இதனால், கமல் அதிமுக கூட்டணியில் இடம்பெற வாய்ப்பிருப்பதாக பேச்சுகள் எழுந்து வரும் நிலையில் அதற்கு அதிமுக அமைச்சர் ஜெயகுமார் அதிரடி விளக்கமளித்துள்ளார். 

மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளார் கமல்ஹாசன். இதனால், கமல் அதிமுக கூட்டணியில் இடம்பெற வாய்ப்பிருப்பதாக பேச்சுகள் எழுந்து வரும் நிலையில் அதற்கு அதிமுக அமைச்சர் ஜெயகுமார் அதிரடி விளக்கமளித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ’’எப்போது வேண்டுமானாலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம். கூட்டணி ரகசியம் கிடையாது. வெளிப்படையாக அறிவிக்கப்படும். அதிமுக தலைமையிலான கூட்டணி யானை பலம் கொண்ட கூட்டணி. யானை பலத்துடன் நாங்கள் இருப்பதால் பூனை பலம் கொண்டவர்கள் ஒன்றும் செய்ய முடியாது. அதிமுக பங்கு மத்திய அரசில் நிச்சயமாக இருக்கும்.

ஸ்டாலின் விளம்பரத்துக்கு வருவது போல் சட்டையைக் கிழித்து வந்ததை கமல்ஹாசன் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வரலாம். அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். எங்களைப் பொறுத்தவரை திமுக, டிடிவி தினகரனின் அமமுக இரண்டும் எதிரிக் கட்சிகள்.

அதிமுக நிழல் தரும் மரம். எங்களிடம் வந்து மற்ற கட்சிகள் இளைப்பாறுவார்கள். நாங்கள் யாரிடமும் இளைப்பாற வேண்டியதில்லை. விளையாட்டுப் பொருளைக் காட்டி ஏமாற்றுவதற்கு நாங்கள் குழந்தைகள் அல்ல. ஸ்டாலினின் தந்தை அரசியலில் இருந்ததால் ஸ்டாலின் தான் அரசியலில் குழந்தை. எங்களுக்குப் பாரம்பரியம் உள்ளது’’ என அவர் தெரிவித்துள்ளார். 

click me!