”அரசியல் பாடம் கற்றுக்கொள்ளவே கேரளாவுக்கு வந்தேன்” - கமலின் அடுத்த அதிரடி...!

 
Published : Sep 01, 2017, 01:34 PM ISTUpdated : Sep 19, 2018, 01:08 AM IST
 ”அரசியல் பாடம் கற்றுக்கொள்ளவே கேரளாவுக்கு வந்தேன்” - கமலின் அடுத்த  அதிரடி...!

சுருக்கம்

Kamal Hassan has come to Kerala to congratulate on Onam festival which is celebrated in the state of Kerala in the state of Kerala.

தோழமை மாநிலமான கேரளாவில் ஆண்டு தோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும்  ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து  தெரிவிக்க நடிகர் கமல்ஹாசன் கேரளா விரைந்துள்ளார்

அதாவது கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதற்காக திருவனந்தபுரம் சென்ற நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,  முதல்வரை சந்தித்து ஓணம் வாழ்த்து தெரிவித்ததாகவும், அதற்காக  ஓராண்டு காலம்  காத்திருந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும், அரசியல் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக  கேரளா வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

அதாவது கமலின் பேச்சு தமிழகத்தில் அரசியல் ஒரு  சாக்கடை போல் உள்ளதை சுட்டி காட்டும் விதமாக அமைந்திருப்பதாகவும், அரசியல் பாடம் கற்றுக்கொள்ள கேரளா தான் செல்ல வேண்டுமா? அப்படியென்றால் தமிழகத்தில் அரசியல் எந்த  நிலையில் இருகின்றது என்பதை அவர் குறிப்பிட்ட பதிலிலேயே தெரிந்துக்கொள்ளும் விதமாக   அமைந்துள்ளது எனவும் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

தற்போது உள்ள சூழலில் கமலின் ஒவ்வொரு  நடவடிக்கையும் அரசியல் வட்டாரத்தில் கூர்ந்து   கவனிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

அமித்ஷா ஆர்டர்.. இபிஎஸ் வீட்டுக்கு சென்ற நயினார்.. கூடுதல் சீட், ஓபிஎஸ்ஸை சேர்க்க நெருக்கடி?
நிலவு போல தான் விஜய்..! விரைவில் மறைந்து போவார்..! திமுகவில் இணைந்த EX மேலாளர் பி.டி.செல்வகுமார் ஆவேசம்..!