ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள், நல்லது செய்து காட்டுகிறோம் …. கமல்ஹாசன் அதிரடி வாக்குறுதி !!

Published : Mar 29, 2019, 09:16 AM IST
ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள், நல்லது செய்து காட்டுகிறோம் …. கமல்ஹாசன்  அதிரடி வாக்குறுதி !!

சுருக்கம்

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வாய்ப்பளித்தால் நாங்கள் கண்டிப்பாக நல்லது செய்து காட்டுவோம் என தேர்தல் பிரச்சாரத்தின்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.  

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் தென்சென்னை தொகுதியில் ரங்கராஜன்  என்பவர் போட்டியிடுகிறார். அசாம் மாநிலத்தில் மாவட்ட ஆட்சியர் பணியில் இருந்து ராஜிநாமா செய்துவிட்டு, இவர் தேர்தலில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து செம்மஞ்சேரியில் நேற்று இரவு கமல்ஹாசன் பேசினார்.

அப்போது ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் தருவோம் என்று தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளோம். அதை கேலி செய்கின்றனர். 40 ஆண்டுகள் எதுவும் செய்யாமல் இருந்துவிட்டு, எங்களை கேலி செய்கின்றனர். மக்களுக்குத் தண்ணீர் கிடைக்கச் செய்வது மட்டுமல்ல, பலருக்கு வேலைகளும் கிடைக்கச் செய்வோம். 

ஒரு நல்லது நடக்கும்போது, அதன் சுழற்சியாக மற்ற நல்லதுகளும் நடக்கும். இப்போது திருடுவதை சிலர் நிறுத்தினாலே போதும். இரண்டு தமிழகத்தை மேம்படுத்துவதற்கான பணம் கிடைக்கும் என கமல் குற்றம்சாட்டினார்.

தமிழகத்துக்கு . திட்டங்கள் எல்லாம் வகுத்துக் கொடுக்க அறிவார்ந்த தமிழர்கள் காத்திருக்கின்றனர். அவர்களை யாரும் கேட்கவில்லை. திட்டங்களுடன் தொழில் முனைவோர் வரும்போது, எங்களுக்கு எவ்வளவு தருவீர்கள் என்றுதான் கேட்டனர்.

மக்கள் நீதி மய்யம் அப்படி இருக்காது. தொழில் முதலீடு செய்ய வருபவர்களிடம் அவர்களுக்கு என்ன வேண்டும் என்றுதான் கேட்போம். அவர்கள் இங்கு வந்தால் நமக்கு வேலை கிடைக்கும். செய்வோம், செய்வோம் என்று பலர் மக்களை ஏமாற்றியுள்ளனர்.

பிரசாரத்தின்போது பேசிய  வேட்பாளர் ரங்கராஜன், குடிநீர் பிரச்னை உள்ளது. அதை எங்களால் தீர்க்க முடியும். நீர்நிலைகளைத் தூர்வாருவதுடன், அரசு புறம்போக்கு நிலங்களில் குளங்கள் அமைப்போம். இந்தத் திட்டத்தின் மூலம் 50 லட்சம் பேருக்கு 5 ஆண்டுகளில் வேலை வாய்ப்பைத் தர முடியும் என்றார்.

PREV
click me!

Recommended Stories

வெண்டிலேட்டரில் இருக்கும் காங்கிரஸுக்கும் இந்தியா கூட்டணிக்கும் தொடர்பில்லை: உமர் அப்துல்லா அதிரடி
அமித்ஷாவுடன் பேசியது என்ன? பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டி? நயினார் நாகேந்திரன் விளக்கம்!