கமல் கூட்டணி வைக்கும் அளவிற்கு வளரவில்லை.. அவர் அப்பு கமலாகவே இருக்கிறார். வைகைச்செல்வன் அட்டாக்..!

By T BalamurukanFirst Published Nov 3, 2020, 9:24 PM IST
Highlights

அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் தனது ட்விட்டர் பக்கத்தில்.., “கழகங்களோடு கூட்டணி இல்லை என்கிறார் கமல். கூட்டணி வைக்கிற அளவிற்கு கமல் இன்னும் வளரவில்லை. இன்னும் ‘அப்பு’ கமலாகவே இருக்கிறார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில்,அதிமுக திமுக போன்ற கட்சிகள் கூட்டணி அமைப்பதிலும் இருக்கும் கூட்டணிக்கட்சிகளை கழட்டிவிடுவதிலும் மும்மரமாக இருக்கின்றன. கடந்த தேர்தல்களில் மக்கள் நலக்கூட்டணி அமைத்து போட்டியிட்ட கட்சிகள் எல்லாம் தற்போது வெவ்வேறு அணியில் இடம்பிடித்திருக்கின்றன. தேமுதி பாமக ஆகிய கட்சிகள் அதிமுகவுடன் தொடர்ந்து பயணிக்குமா என்பது தேர்தல் நெருங்கும் போது தான் தெரியும். பாஜக தமிழகத்தில் தன்னை பிரமாண்டமாக காட்டிக்கொள்ள அதற்கான வேலைகளை ஆரம்பித்திருக்கிறார்கள்.தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியா? இல்லை பாஜக தலைமையிலான கூட்டணியா என்கிற சந்தேகம் நீடித்துக்கொண்டே இருக்கிறது. தேசிய ஜனநாயகட்சியின் கூட்டணியின் சார்பில் யார் முதல்வர் வேட்பாளர் என்கிற குழப்பம் இன்னும் நீடித்து வருகிறது.காரணம் பாஜக தலைவர்கள் செல்லும் இடங்களில் எங்கேயுமே முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் என்று அழுத்தமாக சொல்லவே இல்லை. இதுவே அதிமுக மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

  சட்டமன்றத் தேர்தலை முதன்முறையாக எதிர்கொள்ளவிருக்கும் மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு கூட்டம் கமல்ஹாசன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்தில் கூட்டணி மற்றும் களப்பணி குறித்து ஆலோசிக்கப்பட்டது.இந்த நிலையில் கழகங்களுடன் "மக்கள் நீதி மய்யம்" கூட்டணி அமைக்கப் போவதில்லை என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். மேலும், 3ஆவது அணிக்கான தகுதி மக்கள் நீதி மய்யத்துக்கு வந்து விட்டதாகவும், "மக்களுடனே எங்கள் கூட்டணி" என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

கமலின் இந்த அறிவிப்பு குறித்து விமர்சித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் தனது ட்விட்டர் பக்கத்தில்.., “கழகங்களோடு கூட்டணி இல்லை என்கிறார் கமல். கூட்டணி வைக்கிற அளவிற்கு கமல் இன்னும் வளரவில்லை. இன்னும் ‘அப்பு’ கமலாகவே இருக்கிறார்.

click me!