கமல்ஹாசனுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்த திமுக அமைச்சர்..! என்ன காரணம் தெரியுமா.?

Published : Feb 26, 2023, 02:11 PM IST
கமல்ஹாசனுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்த திமுக அமைச்சர்..! என்ன காரணம் தெரியுமா.?

சுருக்கம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மார்ச் 1 ஆம் தேதி திமுகவினரால் உற்சாகமாக கொண்டாடப்படவுள்ளநிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்பான புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைக்க வருமாறு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை அமைச்சர் சேகர்பாபு நேரில் சென்று அழைத்துள்ளார்.  

மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவையோட்டி ஆண்டு தோறும் திமுகவினரால் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், கட்சி கொடி ஏற்றியும், இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு 70 வது பிறந்தநாளையொட்டி சிறப்பாக கொண்டாட திமுகவினர் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக சென்னை வடக்கு மாவட்டம் சார்பாக அமைச்சர் சேகர்பாபு தலைமையில் 100க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. ஆதரவற்றோர்களுக்கு உணவு வழங்குதல், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்குதல், சிறப்பு மருத்துவ மற்றும் ரத்த தான முகாம் நடைபெறவுள்ளது.

தாயை இழந்து தவித்த ஓபிஎஸ்..! நள்ளிரவில் வீட்டிற்கே ஓடி சென்று ஆறுதல் சொன்ன சீமான்

கமலுக்கு அழைப்பு விடுத்த அமைச்சர்

இந்தநிலையில் வருகிற 28 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்பாக புகைப்பட கண்காட்சி ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புகைப்பட கண்காட்சியை திறந்து வைக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனிடம் அமைச்சர் சேகர்பாபு கேட்டுக்கொண்டார். இந்தநிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் இல்லத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு,  சென்னை மாநகர மேயர் பிரியா ஆகியோர் அழைப்பிதழ் வழங்கி வரவேற்றனர். இந்த அழைப்பிதழை ஏற்றுக்கொண்ட கமல்ஹாசனும் விழாவில் பங்கேற்பதாக உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதையும் படியுங்கள்

ஒற்றை தலைமை தீர்ப்புக்கு பின் அதிரடியாக களத்தில் இறங்கும் இபிஎஸ்.!அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!