
நடிகர் கமல் ஹாசன் அரசியலுக்கு வருவது குறித்து, கமலை வரவேற்கும் விதமாக பாடல ஒன்றை அவரது ரசிகர்கள் வெளியிட்டுள்ளனர்.
நடிகர் கமல் ஹாசனின் அரசியல் பிரவேசம் குறித்து அவரது ரசிகர்கள் பெரிதும் வரவேற்று வருகின்றனர். கட்சி கொடி, கோட்பாடு குறித்து கமல் ஹாசன் நாளை அறிவிக்க உள்ள நிலையில் அவரது ரசிகர்கள் பெரிதும் உற்சாகத்தில் உள்ளனர். முடங்கி கிடக்கும் தமிழகத்துக்கு இனி அம்மாவும் நீயே..! அப்பாவும் நீயே...! என்றும் அப்துல் கலாம் உருவத்தில் கமல் உருவம் அச்சடித்தும், அவரது ரசிகர்கள் தமிழகம் முழுவதும் போஸ்டர்களை ஒட்டி
வருகின்றனர். இந்த நிலையில் மதுரை வந்துள்ள கமலை வரவேற்கும் வகையில் வா ராசா.... வா ராசா... கமலஹாசா என்று பாடல் ஒன்றை அவரது ரசிகர்கள் வெளியிட்டுள்ளனர்.
நடிகர் கமல் ஹாசன் துவங்கும் கட்சியின் கொடி, கொள்கைகள் குறித்து மதுரையில் அறிவிக்க உள்ளார். இதற்காக அவர் இன்று மதுரை சென்றிருக்கிறார். கட்சி தொடங்குவது தொடர்பாக, தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து நடிகர் கமல் ஹாசன் வாழ்த்து பெற்றார். நாளை தனது அரசியல் களத்தில் கமல் இறங்க உள்ள நிலையில், மதுரை ஒத்தக்கடையில் பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. இதில், டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.
அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்க உள்ளதால், கமல் ரசிகர்கள், தமிழகம் முழுவதும் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். அதில் சில போஸ்டர்கள் மக்கள் மனதை ஈர்த்து வருகிறது. அதாவது, நடிகர் கமல் ஹாசனின் முகம், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் வடிவில் அமைக்கப்பட்டு போஸ்டர் ஒட்டப்பட்டு வருகிறது. அதேபோல் கமல், பாரதியார் கெட்டப்பிலும் போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது. ரசிகர்கள் அடித்துள்ள போஸ்டர்களில், "முடங்கிக் கிடக்கும் தமிழகத்துக்கு இனி அம்மாவும் நீயே அப்பாவும் நீயே" என்றும் ஆண்டவர் கமலின் அரசியல் பிரவேசம் என்றும் அதில் அச்சிடப்பட்டுள்ளது.
கட்சியின் கொடி, கட்சியின் கொள்கை குறித்து கமல் அறிவிக்க உள்ள நிலையில், அரசியலில் களமிறங்கும் நடிகர் கமல் ஹாசனை வரவேற்று, அவரது ரசிகர்கள் சார்பில் புதிதாக பாடல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. வா ராசா... வா ராசா... - கமல ஹாசா என்று பாடல் உள்ளது. இந்த பாடலை திவ்யா நாயர் என்பவர் பாடியுள்ளார். கமல் குறித்த போஸ்டர்களும், வா ராசா... வா ராசா... கமல ஹாசா என்ற பாடலும் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.