நான் பூ அல்ல; விதை - ஆரம்பமானது ஆண்டவரின் ஆட்டம்...! ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த கமல்...! 

 
Published : Feb 20, 2018, 05:20 PM ISTUpdated : Sep 19, 2018, 01:59 AM IST
நான் பூ அல்ல; விதை - ஆரம்பமானது ஆண்டவரின் ஆட்டம்...! ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த கமல்...! 

சுருக்கம்

I m not flower Seed Kamals response to Stalin

நான் பூ அல்ல ; விதை, என்னை முகர்ந்து பார்க்காதீர்கள், விதைத்து பாருங்கள் வளருவேன் என நடிகர் கமல் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ளார். மேலும் நான் கூட்டணி வைப்பேன் என எப்போதும் சொன்னதில்லை எனவும் கமல் தெரிவித்துள்ளார். 

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று தொண்டர்களுக்க கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், கழகத்தை குடும்பக் கட்சி என்று வெளியிலிருந்து விமர்சனம் வரும்போதெல்லாம், இது குடும்பக் கட்சிதான்; பல இலட்சம் குடும்பங்கள் ஒன்றிணைந்து பாடுபடும் கட்சிதான் என்று நெஞ்சம் நிமிர்த்திட் சொல்வதற்குக் காரணம், குடும்பப் பாசம் நிறைந்த கொள்கை உறவுகளாக நம் உடன்பிறப்புகள் இருப்பதால்தான்.

அண்ணாவும், கருணாநிதியும் வளர்த்துள்ள இந்தக் கொள்கை உணர்வுமிக்க குடும்பப் பாசம் உள்ளவரை, தி.மு.கழகம் எனும் பேரியக்கத்தை எந்த சக்தியாலும் அசைக்க முடியாது.

பருவநிலை மாறும்போது ஒரு சில பூக்கள் திடீரென மலரும்; பின் உதிரும். அதுபோல தமிழக அரசியல் களத்திலும் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம். ஆனால், காகிதப் பூக்கள் மணக்காதல்லவா! தி.மு.க. என்பது ஆயிரங்காலத்துப் பயிர். 

இயக்கம் வெற்றிநடை போடுவதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும் என்ற உறுதியை வழங்குகிறேன் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். 

இந்நிலையில், நான் பூ அல்ல ; விதை, என்னை முகர்ந்து பார்க்காதீர்கள், விதைத்து பாருங்கள் வளருவேன் என நடிகர் கமல் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ளார். மேலும் நான் கூட்டணி வைப்பேன் என எப்போதும் சொன்னதில்லை எனவும் கமல் தெரிவித்துள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!
திமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!