கோட்சே குறித்த சர்ச்சைப் பேச்சு … கமல்ஹாசன் முன்ஜாமீன் வழக்கில் திங்கட்கிழமை தீர்ப்பு !!

By Selvanayagam PFirst Published May 17, 2019, 8:45 PM IST
Highlights

இந்து தீவிரவாதிகள் குறித்த கமல்ஹாசன் மீதான வழக்கில் முன்ஜாமின் கோரி  அவர் தாக்கல் செய்த மனு மீது மதுரை உயர்நீதிமன்ற  கிளை திங்கட்கிழமை தீர்ப்பு வழங்குகிறது. 
 

கடந்த வாரம் அரவக்குறிச்சி இடைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய நடிகர் கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, என்றும் அவர் பெயர் நாதுராம் கோட்சே என்றும் சர்ச்சைக்குரிய வகையில் தெரிவித்தார்.

இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது, பிரதமர் முதற்கொண்டு அமைச்சர்கள் வரை கமலின் பேச்சுக்கு பதிலடி கொடுத்தனர். அவர் மீது 70 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் இது தொடர்பான வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

அதே நேரத்தில் தான் வரலாற்று உண்மையைத்தான் பேசியிருக்கிறேன் என்றும் எனது பேச்சு சரியானது என்று கூறி கமல் தனது கருத்தில் உறுதியாக இருந்தார்.

இதையடுத்து கமல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது அவரை நோக்கி செருப்பு, முட்டை உள்ளிட்டவற்றை வீசி இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 


இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்படாமல் இருப்பதற்காக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முன் ஜாமின் வழங்க கோரி மனுதாக்கல் செய்துள்ளார். .இந்த வழக்கில் வரும் திங்கட்கிழமை தீர்ப்பு வழங்க உள்ளது.

click me!