கமலை உசுப்பேற்றி விட்டு பின்னால் நிற்கும் ரஜினிகாந்த்...

First Published Jul 20, 2017, 1:19 PM IST
Highlights
kamal and rajinikanth join to political


திரைத்துறையில் சாதித்தால் மட்டும் போதும் அரசியல் வேண்டாம் என பல ஆண்டுகளாக நடிப்பு தயாரிப்பு என்று தனக்கென்று ஒரு வட்டத்தை அமைத்து அதற்குள் வாழ்ந்து வந்தவர் நடிகர் கமலஹாசன்.

தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டதாக ஒரு பேட்டியில் நடிகர் கமலஹாசன் கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு ஆளும் கட்சி அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்து புகைப்பட்டம் எடுத்துக்கொண்டார். அப்போது அவர் தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று கூறினார். இருவரது கருத்துக்களின் பின்னணி என்னவென்று இப்போது தான் தெரியவந்துள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த பின் ரஜினியும் கமலும் அரசியல் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே பல்வேறு கருத்துக்களை பரிமாறியுள்ளனர்.

இதையடுத்து தான் இருவரும் அரசுக்கு எதிராக கருத்துக்களை கூறியுள்ளனர் என்று அதிமுக வட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர். நேற்று முன் கமல் டிவிட்டரில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கவிதை மூலம் முடிவெடுத்தால் யாம் முதல்வர் என்று கூறி இருந்தார்.

கமலஹாசனின் இந்த பதிவு ஒட்டு மொத்த அரசியல் வாதிகளையும் அச்சத்தில் ஆழ்த்தியது. எச்.ராஜா, தமிழிசை உள்ளிட்டோர் கமலின் கவிதைக்கு தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். இந்த விஷயம் விஸ்வரூபமாய் உருவெடுத்தது.

இதையடுத்து நேற்று மீண்டும் கமல் தனது டூவிட்டர் பக்கத்தில் ரசிகர்களும் பொதுமக்களும் ஊழல் குறித்த புகார் மனுக்களை இணையதள முகவரியில் அனுப்பும்படி கூறினார். இன்று காலையில் இருந்து பொதுமக்களும் ரசிகர்களும் புகார் மனுக்களை அனுப்பியபடி உள்ளனர்.

 கமலின் ரசிகர்களும் ரஜினி ரசிகர்களும் ஒருசில மாவட்டங்களில் ஊழல் நடந்தது குறித்து மறைமுக விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் நேற்று, கமலின் அரசியல் வருகைக்கு தாங்கள் குடும்பத்துடன் ஆதரவு தெரிவிப்பதுடன் துணை நிற்போம் என ரஜினியின் மகள் சௌந்தர்யா தெரிவித்தார்.

ஏற்கனவே ரஜினி மற்றும் கமலஹாசன் இணைந்து தான் அரசியலில் குதிப்பார்கள் என கூறப்பட்டு வரும் நிலையில் சௌந்தர்யாவின் இந்த பேச்சு அதனை உறுதி செய்யும் விதத்தில் அமைத்துள்ளது.

click me!