மோடி பதவியேற்பு விழா !! கமல், ரஜினிக்கு அழைப்பு !!

By Selvanayagam PFirst Published May 27, 2019, 11:00 PM IST
Highlights

வரும் 30 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

மக்களவைத் தேர்தலில் பிரமாண்ட  வெற்றியைப் பெற்று இந்திய அளவில் 353 இடங்களை கைப்பற்றிய பாஜக  கூட்டணி, இரண்டாவது முறையாக மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளது. அக்கூட்டணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பிரதமராக நரேந்திர மோடி வரும் 30ஆம் தேதி மாலை 7 மணியளவில் ஜனாதிபதி மாளிகையில் பதவியேற்கவுள்ளார்.

பிரதமரின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள வெளி நாட்டுத் தலைவர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள், அரசியல் மற்றும் திரை பிரபலங்கள் என பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

அதிமுகவிலிருந்து முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ்,  மற்றும் மூத்த அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் அமோக வெற்றி பெற்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் பாஜக அழைப்பு விடுத்துள்ளது.

இந்நிலையில் மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள நடிகர் ரஜினிகாந்த், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் ஆகியோருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

பொதுவாக நடிகர் ரஜினிகாந்த் பெரும்பாலான பிரச்சனைகளில் பாஜக ஆதரவு நிலைப்பாட்டிலேயே இருந்துள்ளார். தற்போது தர்பார் படப்பிடிப்பில் இருந்துவரும் ரஜினிகாந்த், பிரதமரின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வார் என்றே கூறப்படுகிறது.

ஆனால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அப்படி இல்லை. பெரும்பாலான பிரச்சனைகளில் மோடிக்கு எதிர்ப்பளராகவே அறியப்பட்டுளளார். அண்மையில் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும், அவன் பெய்ா நாதுராம் கோட்சே என்று கமல் தெரிவித்தார். இதற்கு பிரதமர் மோடியே பதிலடி கொடுத்தார்.  

இந்த நிலையில் பிரதமரின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டால் தேவையற்ற விமர்சனங்கள் எழலாம் என்பதால், கமல்ஹாசன் கலந்துகொள்ள மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

click me!