கல்யாணராமன் கைது.. விளைவுகள் வேற மாதிரி இருக்கும்.. திமுக அரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை.!

By Asianet TamilFirst Published Oct 18, 2021, 10:03 PM IST
Highlights

கல்யாணராமன் கைதை எந்த விதத்திலும் பாஜக ஏற்றுக்கொள்ள முடியாது. இதையெல்லாம் பாஜக பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 

சென்னையில் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழக போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள கல்யாணராமனை ஜாமினில் எடுக்க வழக்கறிஞர்கள் சென்றபோது, 2018-இல் போடப்பட்ட எப்ஐஆர் (490), 2019-இல் போடப்பட்ட எப்ஐஆர் (336), 2020-இல் போடப்பட்ட எப்ஐஆர் (60), (98), (152) என இன்று புதிதாக 5 எப்ஐஆர்-ஐ நீதிபதியிடன் போலீஸார் கொடுத்துள்ளனர். இந்த எப்ஐஆர் கீழ் கல்யாணராமனை இன்னும் கைது செய்யாமல் இருக்கிறோம் என்று போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது. கல்யாணராமன் கைதை எந்த விதத்திலும் ஏற்க முடியாது. இதுபோன்ற நடவடிக்கையை பாஜக பார்த்துக்கொண்டு சும்மாவும் இருக்காது.
கல்யாணராமன் குண்டர் சட்டத்தில் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டு இப்போதுதான் வெளியே வந்துள்ளார். இந்த வழக்குகள் எல்லாம் குண்டர் சட்டம் போடுவதற்கு முன்பாக உள்ள வழக்குகள் ஆகும். நீதிபதியிடம் ஜாமின் கொடுக்க முன்வரும்போது, புதிதாக 5 எப்ஐஆர்ஐ காட்டுகிறார்கள். இதுபோன்ற செயலை பாஜக பார்த்துக்கொண்டு இருக்கும் என திமுக ஆட்சியாளர்கள் நினைத்தால் விளைவுகள் வேறுமாதிரி இருக்கும். கல்யாணராமனை கைது செய்திருப்பதை எந்த விதத்திலும் பாஜக ஏற்றுக்கொள்ளாது. காவல் துறை ஆளுங்கட்சியின் ஏவல் துறையாக இருக்கக்கூடாது” என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார். 

click me!