கள்ளக்குறிச்சி விவகாரம்.. திமுக ஆட்சி வந்தது முதலே இப்படித்தான் நடக்குது.. போட்டுத்தாக்கிய வானதி சீனிவாசன்!

By Asianet Tamil  |  First Published Jul 17, 2022, 9:03 PM IST

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு லாக் அப் மரணங்கள், பெண் குழந்தைகள் மீதான வன்முறைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.


கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியூர் என்ற பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து மாணவி ஒருவர் பள்ளியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டார். இதை அடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே மாணவியின் உடற்கூராய்வு அறிக்கையும் வந்துள்ளது. இதுத்தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில், பள்ளியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். காவல்துறையின் பாதுகாப்பை மீறி, ஆயிரக்கணக்கானோர் பள்ளிக்குள் நுழைந்து, பள்ளி வாகனங்களுக்கு தீவைத்து, காவல்துறையினரின் வாகனங்களுக்கு எல்லாம் தீவைத்து, காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினர்.

இதையும் படிங்க: என்ன நடக்கிறது கள்ளக்குறிச்சியில்? பதவி தான் முக்கியமா? திமுகவை பொளந்த அண்ணாமலை

Tap to resize

Latest Videos

பெரும் கலவரமாக இந்த நிகழ்வு நடந்தேறியுள்ள நிலையில், இதுதொடர்பாக தமிழக அரசியல் கட்சிகள் அரசை விமர்சித்தும் கலவரக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் மாணவியின் மரணம் குறித்தும் இன்று நடந்த கலவரம் தொடர்பாகவும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை அடையாறில் உள்ள தனியார் ஹோட்டலில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக வானதி சீனிவாசனும் நயினார் நாகேந்திரனும் பங்கேற்று விளக்கம் அளித்தனர். 

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி வன்முறை சம்பவ எதிரொலி... தமிழகத்தில் நாளை முதல் தனியார் பள்ளிகள் வேலைநிறுத்தம்!!

பின்னர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது போன்ற சம்பவம் முதல் முறை கிடையாது. தமிழகத்தில் லாக் அப் மரணங்கள், பெண் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள், பல்வேறு நிகழ்ச்சிகள் தற்போது அதிகமாக நடைபெற்றுக கொண்டிருக்கின்றன. திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது இது போன்ற குற்றங்கள் நடந்தபோது எப்படி நடந்து கொண்டார்கள்? தற்போது காவல் துறை முழுவதுமாக அவர்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா என்று தெரியாத அளவுக்கு ஆட்சி நடத்தி வருகிறார்கள். ஒரு சாதாரண விசாரணைக்குக்கூட பொதுமக்கள் காவல் துறையினரை நாட அஞ்சும் நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழகத்தில் பெண்கள், மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை.. கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி

குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை பொருத்தவரை கூட்டணி கட்சிகளில் உள்ள அனைவரையும் சந்தித்து ஆதரவு கேட்டு  இருக்கிறோம். அதன் ஒரு பகுதியாக ஓ. பன்னீர்செல்வம் தரப்பிடமும் ஆதரவு கோரி இருக்கிறோம்” என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். 
 

click me!