
ஒரு மனிதன் நல்லவனாக இருக்கலாம், ஆனால் ரொம்ப நல்லவனாக இருந்தால் எப்போதுமே அவன் கோழையாகத்தான் இருக்க முடியும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் காலா. இந்த படத்தை ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ் தயாரித்து இருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கிறார்.
கதாநாயகியாக இந்தி நடிகை ஹீமா குரோசி நடித்துள்ளார். இந்தி நடிகர் நானா படேகர், சமுத்திரக்கனி, ரவி காலே, சாயாஜி ஷின்டே, ஈஸ்வரிராவ், அஞ்சலி பட்டேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள்.
இந்நிலையில் காலா படத்தின் பாடல்களை இன்று காலை நடிகர் தனுஷ் டுவிட்டரில் பெளியிட்டார். இதைத் தொடர்ந்து காலா படத்தின் இசை வெளியீட்டு விழா நந்தனம் ஓய்எம்சிஏ மைதானத்தில் இன்று மாலை நடைபெற்றது. பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்றுப் பேசினார்
அப்போது புத்திசாலியுடன் பழக வேண்டும் அதில் எந்தத் தப்பும் இல்ல… ஆனால் அதி புத்தி சாலியுடன் பழக கூடாது ஏன்னா அது என்றைக்குமே ஆபத்துதான் என தெரிவித்தார்.
நல்லவனாக இருக்க வேண்டும். ரொம்ப நல்லவனாக இருக்க கூடாது. அப்படி இருந்தால் கோழை என்பார்கள் என குறிப்பிட்ட ரஜினிநாந்த், நான் முடிந்துவிட்டேன் என 40 ஆண்டுகளாக சொல்லி வருகிறார்கள், ஆனால் நான் எப்போதும் நிற்பேன் என அவர் தெரிவித்தார்.