வெளியானது காடுவெட்டி குருவின் மனைவி எழுதிய உருக்கமான கடிதம்..! மகனும் வீடியோ வெளியீடு..!

Published : Nov 12, 2018, 06:29 PM ISTUpdated : Nov 12, 2018, 06:36 PM IST
வெளியானது காடுவெட்டி குருவின் மனைவி எழுதிய உருக்கமான கடிதம்..! மகனும் வீடியோ வெளியீடு..!

சுருக்கம்

வன்னியர் சங்க முன்னாள் தலைவர் மறைந்த காடுவெட்டி குருவின் மகன் தனது தாயை கண்டுபிடித்து மீட்டுக் கொடுக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார். இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வன்னியர் சங்க முன்னாள் தலைவர் மறைந்த காடுவெட்டி குருவின் மகன் தனது தாயை கண்டுபிடித்து மீட்டுக் கொடுக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார். இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பா.ம.க.வின் அச்சாணியாக கருதப்படும் வன்னியர் சங்கத்தின் தலைவராக செல்வாக்குடன் வலம் வந்தவர் காடுவெட்டி குரு. அக்கட்சியினராலும் வன்னியர் சங்கத்தினராலும் மாவீரன் என்ற பெயருடன் அழைக்கப்பட்டு வந்தார். சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். இவரது இறப்பிற்கு பின்னர், குருவின் மனைவியான லதா கையெழுத்திட்ட ஒரு கடிதம் தற்போது வெளியாகி உள்ளது.

அதில், 
 
பெருமதிப்பிற்குரிய என் கிராம பெரியவர்களுக்கு மாவீரன் தெய்வத்திரு காடுவெட்டியாரின் மனைவி லதாவின் வணக்கம். நான் திருமணமாகி வந்து காடுவெட்டியில் எப்படி வாழ்ந்தேன் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். நான் என் கணவர் இறந்த பின் என்ன செய்வதென்று தெரியாமல் நடுத்தெருவில் விட்டது போல் உள்ளேன். என் பிள்ளைகளை கூட என்னால் காண முடியவில்லை... அவர்களிடம் பேச முடியவில்லை. அவர் இருந்த போதே என்னிடமிருந்து பிரித்து விட்டவர்கள் இப்போது சொத்துக்கு ஆசைப்பட்டு அவர்கள் எதாவது செய்து விடுவார்களோ என்று பயத்தில் இருக்கிறேன். எனக்கு இருக்கும் ஒரே ஆதரவும் பந்தமும் என் மகள் விருதாம்பிகையும், மகன் கனலரசனும் தான். என் கணவர் விரும்பிய படி அவர்கள் இருவரும் பெரிய படிப்பு படித்து சமூகத்தில் பெரிய அந்தஸ்த்தில் வாழ வேண்டும். இதை என்னால் செய்ய முடியும். என் கணவர் விரும்பியதை போல் நம் ஐயாவின் உதவியோடு இது நடக்கும். ஆனால் இப்போது எனக்கு பயமாக உள்ளது எனவே, ஊர் பெரியவர்களாகிய நீங்கள் எல்லோரும் என் மகளையும் என் மகனையும் என்னோடு சேர்த்து தனியாக என்னுடன் வாழ வைக்க வேண்டும் சொத்துபத்துக்கள்  சட்டப்படி வரும் போது வரட்டும். என் மாமியார் நாத்தனார்கள் மற்றும் அவரது உறவினர்கள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. எனவே ஊர் பெரியவர்களும் நாட்டமைகளும் இதில் எமக்கு நியாயம் வழங்கி என் பிள்ளைகளோடு என்னை சேர்த்து வைக்க வேண்டுகிறேன். எனக்கு பயமாக உள்ளது என் பிள்ளைகள்  வாழ்கையை சீரழித்து விட்டு சொத்தை அபகரிக்க திட்டம் செய்வார்கள் என்று..எனவே நம் ஐயாவின்  முன்னிலையில் நல்ல முடிவை எடுத்து என் பிள்ளைகளை என்னோடு சேர்த்து வாழ வழி செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்....இப்படிக்கு சொர்ணலதா குருநாதன்.

இதற்கிடையில், அவரது மகன் கனலரசன், "எல்லாருக்குமே தெரியும் எனது தந்தை இறந்ததில் இருந்து எங்க அம்மா மிகவும் மன அழுத்தத்தில் இருந்து வந்தார். எங்க அம்மாவுக்கு ஆறுதலாக இருக்கும் என்று சென்னையில் உள்ள அவரது பிறந்தவீட்டுக்கு அனுப்பிவைத்தேன்.

ஆனால் தற்போது வரை அவரை என்னிடம் பேச விடாமல் உறவினர்கள் தடுக்கிறார்கள். என் தாயின் இருப்பிடமும் எனக்கு தெரியவில்லை என குறிப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ மற்றும் தாயாரின் கடிதத்தால் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

PREV
click me!

Recommended Stories

EVM எந்திரம் பிராடு இல்லை..! நான் 4 முறை வெற்றிபெற்றுள்ளேன்.. காங்கிரஸ் எம்.பி., சுப்பிரியா சுலே ஆதரவு
எடப்பாடிக்கு நன்றி சொன்ன புதிய பிஜேபி தலைவர்..! எகிரும், அதிமுக மவுசு