பாமகவுக்கு எதிராக புதிய கட்சி தொடங்கும் காடுவெட்டி குரு மகன்!!

By sathish kFirst Published Dec 28, 2018, 2:46 PM IST
Highlights

காடுவெட்டி குரு பிறந்த நாளான பிப்ரவரி 1-ம் தேதி குரு பெயரில் புதிய கட்சி தொடங்கப்படும் என பாமகவிலிருந்து நீக்கப்பட்ட ' வி.ஜி.கே மணி அறிவித்தார்.

வன்னியர் சங்க தலைவராக இருந்த காடு வெட்டி குரு மறைவிற்குப்பிறகு, குருவிற்கு நினைவு மண்டபம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போது பேசிய அன்புமணி, என் தம்பி கனல் அரசன் எங்களை புரிந்து கொண்டு வருவான் என நம்பிக்கையாகப் பேசினார்.

ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த விழா மேடையில் பேசிய காடுவெட்டி குரு மகன் அது எப்போதுமே நடக்காது என சொல்லும் அளவிற்கு பேசியுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை நடந்த மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. இதில், பா.ம.க-வில் இருந்து நீக்கப்பட்ட வழுவூர் வி.ஜி.கே.மணிகண்டன் மற்றும் காடுவெட்டி ஜெ.குருவின் மகன் கனலரசன் உள்ளிட்டோர் மயிலாடுதுறையில் காடுவெட்டி ஜெ.குரு வின் படத்தைத் திறந்து வைத்தனர்.

இதயடுத்துப் பேசிய வி.ஜி.கே.மணி குருவின் குடும்பத்தை அழிக்க இருக்கும் பா.ம.க. வை எதிர்த்து, வருகிற பிப்ரவரி 1-ம் தேதி காடுவெட்டி ஜெ.குரு பிறந்தநாளன்று, புதிய கட்சி தொடங்கி பாமக-வுக்கு தக்க பாடம் புகட்டுவோம்" என்றார்.

இதனை தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் பேசிய, குருவின் மகன் கனலரசன் "எங்கள் குடும்பத்தை அழிக்க நினைக்கும் ராமதாஸ் மற்றும் அன்புமணிnஆகியோரை எதிர்த்து நிற்போம். என் படிப்பு முடியும் வரை நான் எதிலும் இறங்க மாட்டேன், அதுவரை என் மாமா வழுவூர் வி.ஜி.கே.மணி அனைத்தையும் பார்த்துக்கொள்வார்" என்று கூறினார்.

click me!