சனாதன வெறியில் வன்முறையை தூண்டும் பாஜக.. ஆ.ராசாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் கே.பாலகிருஷ்ணன்..!

By vinoth kumar  |  First Published Sep 22, 2022, 8:46 AM IST

திமுக எம்.பி., ஆ.ராசா பேசிய ஒரு மேடைப் பேச்சின் சிறு பகுதியை எடுத்து வைத்துக் கொண்டு, வன்முறையை தூண்டும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது. பாஜகவின் இந்தப் போக்கு வன்மையான கண்டனத்திற்கு உரியதாகும். 


திமுக எம்.பி., ஆ.ராசா பேசிய ஒரு மேடைப் பேச்சின் சிறு பகுதியை எடுத்து வைத்துக் கொண்டு, வன்முறையை தூண்டும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது என கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். 

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேசுவது அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. கி.வீரமணியின் பாராட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய ஆ.ராசா;- இந்து மதம் மக்களைப்  பிரிக்கிறது. சமூகத்தில் வர்ண பேதம் கற்பிக்கிறது, இந்து மதம்  நம்மையெல்லாம் சூத்திரன் என்று சொல்கிறது,  நீ இந்து என்றால் சூத்திரன் தான், நீ இந்து என்றால் தீண்டத்தகாதவன் தான்  என்கிறது, சூத்திரன் என்றால் வேசியன் பிள்ளைகள் என்று பொருள், அப்படி என்றால் இங்கு எத்தனை பேர் வேசியின் பிள்ளைகளாக இருக்க விரும்புகிறார்கள் என பேசினார். அவரின் இந்தப் பேச்சுக்கு எதிராக பாஜக மற்றும் இந்து முன்னணி உள்ளிட்ட இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதேநேரத்தில் சீமான், வேல்முருகன் உள்ளிட்ட ஆ.ராசாவின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆ.ராசாவிற்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளது. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- ஆ.ராசாவுக்கு எதிராக ஒருபோதும் போராட்டம் நடத்த மாட்டோம்.. பிளான் வேற.. உறுதியாக சொன்ன அண்ணாமலை.

இதுதொடர்பாக மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- திமுக எம்.பி., ஆ.ராசா பேசிய ஒரு மேடைப் பேச்சின் சிறு பகுதியை எடுத்து வைத்துக் கொண்டு, வன்முறையை தூண்டும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது. பாஜகவின் இந்தப் போக்கு வன்மையான கண்டனத்திற்கு உரியதாகும். மனு அநீதி சாஸ்திரத்திலும், சனாதன நூல்களிலும் காலம் காலமாக  இடம்பெற்றுள்ள அநாகரீகமான கருத்துக்கள் குறித்து எந்த கோபமும் கொள்ளாதவர்கள், அதை எடுத்துக்காட்டி விமர்சித்த  ஆ.ராசா மீது பாய்கிறார்கள். தாக்குதலைத் தூண்டிவிடுகிற பகிரங்க முயற்சிகளைச் செய்கிறார்கள்.

எத்தனையோ அறிஞர்களால் எடுத்துக் காட்டப்பட்டு, சாடப்பட்ட - இந்திய அரசமைப்புக்கு விரோதமான அந்த கருத்துக்களை சுட்டிக்காட்டி பலரும் கண்டித்துள்ளார்கள். ஆனால் அதையே ஆ.ராசா எடுத்துச் சொன்னால் மட்டும் எதிர்ப்பு எழுவது ஏன்?  சாதி ஆதிக்கத்தின் அடிப்படையில் எழும் அதே சனாதன வெறிதானே? இந்த சிந்தனைதான் ஆபத்தானது, அநாகரீகமானது. பாஜக முன்னெடுக்கும் இத்தகைய அரசியல் வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தப்பட வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். 

இதையும் படிங்க;- என் சகோதரிகள், தாய்மார்களை பழித்து பேசியவர் எவனா இருந்தாலும் சும்மா விடமாட்டேன்! எதுக்கும் அசராத உத்தம ராமசாமி

click me!