
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக கே.பாலகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2006 முதல் 2011ம் ஆண்டு வரை சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டவர் பாலகிருஷ்ணன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய பிரிவு செயலாளராக நீண்ட நாட்களாக செயல்பட்டு வருபவர்.
பிரேமானந்தா வழக்கு, வாச்சாத்தி கொடுமைகளுக்கு எதிரான வழக்குகளில் உறுதியாக நின்று போராடியவர்.
இந்த மாநாட்டில் ஜி.ராமகிருஷணன் மீண்டும் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக ஒரு சாராரும், ஆர்.உமாநாத்தின் மகள் உ.வாசுகி மாநிலச் செயலாளராக முயற்சி செய்வதாக ஒரு சாராரும் பேசிவந்தனர்.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22வது மாநில மாநாடு தூத்துக்குடியில் கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடைசி நாளான இன்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரை நிர்வாகிகள் குழு தேர்வு செய்தனர்.
அதில், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக கே. பாலகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.