சற்றுமுன்: தனி மாநிலமாக உருவாகிறதா கொங்கு நாடு.??? மத்திய அரசு அளித்த பரபரப்பு விளக்கம்.

Published : Aug 03, 2021, 02:08 PM ISTUpdated : Aug 03, 2021, 02:17 PM IST
சற்றுமுன்: தனி மாநிலமாக உருவாகிறதா கொங்கு நாடு.??? மத்திய அரசு அளித்த பரபரப்பு விளக்கம்.

சுருக்கம்

இது குறித்து  கருத்து தெரிவித்துவந்த பாஜகவினர், கொங்குநாடு என்பது ஒரு வார்த்தைக்காக குறிப்பிடப்பட்டதுதான் என்றும், அதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் கூறிவந்தனர். ஆனால் பாஜகவுக்கு ஆதரவாக சமூகவலைதளத்தில் செயல்படுவோர், ஒன்றியம் என்றால் இனிக்கிறது, கொங்கு நாடு என்றால் கசக்கிறதா என திமுகவினரை குறிப்பிட்டு விமர்சித்து வந்தனர். 

தமிழகத்தை இரண்டாக பிரிக்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் விளக்கம் அளித்துள்ளார். தமிழக எம்பிக்கள் ராமலிங்கம் மற்றும் பாரிவேந்தர் ஆகியோர் எழுத்துப்பூர்வமாக எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். தமிழகத்திலிருந்து கொங்கு மண்டலத்தை தனி மாநிலமாக பிரிப்பதற்காக மத்திய அரசு திட்டம் தீட்டு வருவதாகவும், அது விரைவில் நடக்கப்போகிறது எனவும், உறுதி செய்யப்படாத செய்திகள் உலா வந்தன. இந்நிலையில் அப்படி ஒரு திட்டம் இல்லை என மத்தியஅரசு பதில் அளித்துள்ளது. 

மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, எல். முருகனின் சுயவிவர குறிப்பில் கொங்குநாடு என குறிப்பிடப்பட்டிருந்தது. இதை மத்திய அரசு வெளியிட்டிருந்ததால்  அது பலத்த சந்தேகத்தை எழுப்பியது. பெரும் விவாதமாகவும் அது வெடித்தது. கொங்குநாடு என மத்தியஅரசு குறிப்பிடுகிறது என்றால், தமிழகத்தில் இருந்து கொங்கு மண்டலத்தை தனிமாநிலமாக பிரித்து கொங்கு மாநிலத்தை உருவாக்கும் திட்டம் மத்திய அரசிடம் இருக்கிறதா? என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இது அரசியல் விவாதமாக மாறியது.

அதாவது மத்திய அரசை திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர், ஒன்றிய அரசு என கூறி  வருகின்றனர். இதில் எரிச்சல் அடைந்துள்ள மத்திய அரசு அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கொங்கு மண்டலத்தை தமிழகத்தில் இருந்து பிரித்து தனி மாநிலமாக உருவாக்க முடிவு செய்திருப்பதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இதற்கு திமுக உள்ளிட்ட பல கட்சிகளும், மத்திய அரசுக்கு அப்படி ஒரு எண்ணம் இருப்பின் அதை கைவிட வேண்டும், அந்த எண்ணம்  ஒருபோதும் ஈடேறாது என எச்சரித்து வந்தனர்.

இது குறித்து  கருத்து தெரிவித்துவந்த பாஜகவினர், கொங்குநாடு என்பது ஒரு வார்த்தைக்காக குறிப்பிடப்பட்டதுதான் என்றும், அதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் கூறிவந்தனர். ஆனால் பாஜகவுக்கு ஆதரவாக சமூகவலைதளத்தில் செயல்படுவோர், ஒன்றியம் என்றால் இனிக்கிறது, கொங்கு நாடு என்றால் கசக்கிறதா என திமுகவினரை குறிப்பிட்டு விமர்சித்து வந்தனர். இது சமூக வலைத்தளத்தில் திமுக- பாஜக இடையே மோதலாகவே நீடித்து வந்தது. 

இந்நிலையில் இச்சர்ச்சை தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த எம்பிக்கள் எஸ். ராமலிங்கம் மற்றும் பாரிவேந்தர் ஆகியோர் எழுத்துப்பூர்வமாக மத்திய அரசுக்கு விளக்கும் கேட்டு கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், விளக்கம் அளித்துள்ளார். அதில், தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் திட்டம் ஏதும் தற்போதைக்கு மத்திய  அரசின் பரிசீலனையில் இல்லை என கூறியுள்ளார். மத்திய அமைச்சரின் விளக்கத்தின் மூலம் கொங்கு நாடு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

 

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!