பிரதமரிடம் நேரடியாக பேசாமல்.. எதுக்கு இந்த வெட்டி பில்டப்.. கன்னடத்தில் பேசி அண்ணாமலையை கலாய்த்த சீமான்.!

Published : Aug 03, 2021, 01:44 PM IST
பிரதமரிடம் நேரடியாக பேசாமல்.. எதுக்கு இந்த வெட்டி பில்டப்.. கன்னடத்தில் பேசி அண்ணாமலையை கலாய்த்த சீமான்.!

சுருக்கம்

வள்ளி திருமண , அரிச்சந்திர மயான கண்டம் , பவளக்கொடி நாடகம் போல தமிழக பாஜகவின் மேகதாது அணை எதிர்ப்பு போராட்ட அறிவிப்பை பார்க்க வேண்டும். பிரதமரிடம் நேரடியாக பேசாமல், போராட்டம் என்று சொல்லி அண்ணாமலை வெட்டி பில்டப் கொடுக்கிறார். Till i death Proud கன்னடிகா என்று கூறிய அண்ணாமலை தற்போது Proud தமிழ்டிகாவாக ஆகிவிட்டாரா..?

ஸ்டாலின் ஆட்சி நன்றாக இருப்பதாக எப்போதும் நான் கூறியதில்லை. பொதுமக்களின் மனுக்களை வாங்கி பெட்டியில் பூட்டிய ஸ்டாலின் 100 நாளில் தீர்த்த பிரச்சனைகள் என்ன? என சீமான் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை அரும்பாக்கம், ராதாகிருஷ்ணன் நகரில் கூவம் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து, அப்பகுதிகளை பார்வையிட்ட  சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;-  மக்களை வெளியேற்றுவதில் திமுக , அதிமுக என்று வேறுபாடில்லை. கருணாநிதி , ஜெயலலிதா, பழனிசாமி ஆட்சியிலும் இதுபோன்று நடந்துள்ளது. ஆக்கிரமிப்பு என்றால் மின் இணைப்பு, எரிவாயு, குடும்ப அட்டை வாக்காளர் அட்டை எப்படி கொடுத்தார்கள். 

இந்த இடம் யாருக்கு வழங்கப்பட உள்ளது. எந்த நோக்கில் பயன்படுத்தப்பட உள்ளது? 2022 ல் அனைவருக்கும் வீடு இருக்கும் என பிரதமர் கூறுகிறார். ஆனால் இப்போது வரை பலருக்கு வீடில்லை. அரசின் பொருளாதாரமே கவலையில் இருக்கிறது. கூவம் ஆற்றில் ஸ்மார்ட் சிட்டி எதுக்கு ? தலைநகரில் தமிழர்கள் வாழக்கூடாது என திட்டமிட்டு இவ்வாறு செய்கிறார்கள்.

மேலும், பேசிய அவர்;- வள்ளி திருமண , அரிச்சந்திர மயான கண்டம் , பவளக்கொடி நாடகம் போல தமிழக பாஜகவின் மேகதாது அணை எதிர்ப்பு போராட்ட அறிவிப்பை பார்க்க வேண்டும். பிரதமரிடம் நேரடியாக பேசாமல், போராட்டம் என்று சொல்லி அண்ணாமலை வெட்டி பில்டப் கொடுக்கிறார். Till i death Proud கன்னடிகா என்று கூறிய அண்ணாமலை தற்போது Proud தமிழ்டிகாவாக ஆகிவிட்டாரா..? அண்ணாமலை பரிதாபத்திற்குரியவர் , அலுவலராக இருந்தவரை தேவையில்லாமல் பதவி விலக வைத்துவிட்டனர். பிரதமர் தாடி முடியை வளர்த்துதான் மக்களின் துயரத்தில் பங்கேற்க வேண்டுமா?

ஸ்டாலின் ஆட்சி நன்றாக இருப்பதாக எப்போதும் நான் கூறியதில்லை. பொதுமக்களின் மனுக்களை வாங்கி பெட்டியில் பூட்டிய ஸ்டாலின் 100 நாளில் தீர்த்த பிரச்சனைகள் என்ன? மார்க்கண்டேய நதியில் ஐந்தே மாதத்தில் அணை கட்டியதை திமுக , அதிமுகவால் ஏன் தடுக்க முடியவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

ஒரே நேரத்தில் தமிழகத்தில் கால்பதிக்கும் பிரதமர் மோடி-ராகுல் காந்தி.. களைகட்டும் அரசியல் களம்!
திமுகவிடம் சில தலைவர்கள் வாங்கி தின்கிறார்கள்..! ஸ்டாலினை தொடர்ந்து மிரட்டும் காங்கிரஸ்..!