வெகு விரைவில் 2ஜி வழக்கு தீர்ப்பு.. உதறலில் உளறும் ஆ.ராசா.. வச்சு செய்யும் அமைச்சர் ஜெயக்குமார்..!

By vinoth kumarFirst Published Dec 10, 2020, 12:23 PM IST
Highlights

திமுகவின் முன்னாள் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீது ஊழல், நில அபகரிப்பு, அராஜகம், அத்துமீறல் உள்ளிட்டவற்றில் சிறப்பு நீதிமன்றங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. இப்போது எங்கள் அமைச்சர்கள் மீது எங்கு விசாரணை நடைபெறுகிறது? முதல்வர் மீது விசாரணை நடைபெறுகிறதா? வழக்கு உள்ளதா? எங்கள் அமைச்சர்கள் மீது வழக்கு இருக்கிறதா? யார் மீதும் வழக்கு இல்லையே. 

மறைந்த தலைவர்கள் குறித்து அவதூறு பேசுவது பண்பாடற்ற செயல். அதிமுகவினர் பக்குவப்பட்ட அரசியல்வாதிகள்; 2ஜி வழக்கில் விரைவில் உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலுக்கு சென்னை மாகாண முன்னாள் முதலமைச்சருமான இராஜாஜியின் 142வது பிறந்தநாளையொட்டி  சென்னை பாரிமுனையில் அவரது உருவச் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்மின், பாண்டியராஜன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார்;- திமுகவின் மீதான 2ஜி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. வெகு விரைவில் இந்த வழக்கின் தீர்ப்பு வரவிருக்கிறது. ஆகையால், விரக்தியின் வெளிப்பாடே ஆ.ராசாவின் பேச்சில் வெளிப்படுகிறது. ஆ.ராசா பயத்தில் உள்ளார்.  மறைந்த தலைவர்கள் குறித்து அவதூறு பேசுவது பண்பாடற்ற செயல். அதிமுகவினர் பக்குவப்பட்ட அரசியல்வாதிகள் என்றார். 

மேலும், திமுகவின் முன்னாள் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீது ஊழல், நில அபகரிப்பு, அராஜகம், அத்துமீறல் உள்ளிட்டவற்றில் சிறப்பு நீதிமன்றங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. இப்போது எங்கள் அமைச்சர்கள் மீது எங்கு விசாரணை நடைபெறுகிறது? முதல்வர் மீது விசாரணை நடைபெறுகிறதா? வழக்கு உள்ளதா? எங்கள் அமைச்சர்கள் மீது வழக்கு இருக்கிறதா? யார் மீதும் வழக்கு இல்லையே. பொத்தம்பொதுவாக சொல்வது நிச்சயமாக எடுபடாது. கண்டிப்பாக திமுகவின் ஓட்டு வங்கிக்குத்தான் கடுமையான பாதிப்பு ஏற்படும்.

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுரப்பா விவகாரத்தில் முதலமைச்சரிடம் ஆளுநர் எந்த விளக்கத்தையும் கேட்கவில்லை. ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் பலருக்கும் சம்மன் அனுப்பி அவர்களை அழைத்து விசாரணை நடத்தி, அதனை பதிவு செய்து வருகிறது. இடையில் இந்த விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தடை நீங்கும்போது மீண்டும் விசாரணை தொடங்கும். விசாரணையின் முடிவில் ஜெயலலிதாவின் மரணம் குறித்த உண்மை நிலை நாட்டு மக்களுக்குத் தெரியவரும் என்றார்.

click me!