
சொத்துகுவிப்பு வழக்கில் சட்டரீதியான விளைவு அரசியல் ரீதியான விளைவு , தீர்ப்பு பலவித மாற்றங்களை கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சசிகலா உள்ளிட்ட நான்கு பேருக்கும் தண்டனையை உறுதி செய்தது நீதிமன்றம். சசிகலா உள்ளிட்டோர் குற்றவாளி என தீர்ப்பு
சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற மேல் முறையீட்டு வழக்கில் இரண்டு நீதிபதிகள் அமர்வு கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைத்தது. இதன் மூலம் நான்காண்டு தண்டனை உறுதியாகியுள்ளது.இதையடுத்து 10 ஆண்டுகளுக்கு சசிகலா தேர்தலில் நிற்க முடியாது.
91-96 காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் 2014 செப்.மாதம் தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா 4 ஆண்டுகள் தண்டனை அளித்தார்.
தண்டனை பெற்ற ஜெயலலிதா , சசிகலா , இளவரசி , சுதாகரன் 21 நாட்களுக்கு பிறகு அக். 18 அன்று விடுதலையானார்கள். பின்னர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த நால்வரையும் நீதிபதி குமாரசாமி 2015 மே 11 அன்று விடுதலை செய்தார். தீர்ப்பை நிறுத்தி வைத்தார்.
இதையடுத்து கர்நாடக அரசும் , திமுக பொதுச்செயலாளர் அன்பழகனும் ஜூலை 7 அன்று மேல்முறையீடு செய்தனர். . இந்த வழக்கு நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் , அமித்வராய் அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அமர்வு 2016 ஜூன் 7 ஆம் தேதி விசாரணைக்கு பின்னர் தீர்ப்பை ஒத்தி வைத்தது .
இந்நிலையில் கடந்த 6 ஆம் தேதி கர்நாடக நீதிமன்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு பற்றி முறையிட அவர் ஒரு வாரத்தில் தீர்ர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார். அதன் படி இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று நேற்று உச்சநீதிமன்ற பதிவாளர் அறிவித்தார்.
சசிகலா முதல்வராக வாய்ப்பு கோரி உள்ள நிலையில் அவருக்கு வாழ்வா சாவா என்கிற நிலைக்கு இந்த தீர்ப்பு எதிர்ப்பர்ர்க்கப்பட்ட நிலையில் இந்த தீர்ப்பு 10-30 மணிக்கு வழங்கப்பட்டது. தீர்ப்பை வாசித்த நீதிபதிகள் சசிகலா உள்ளிட்ட நான்கு பேர் தண்டனையை நிறுத்தி வைத்த கர்நாடக உயர்நீதி மன்ற தீர்ப்பை நிறுத்தி வைத்தார்.
இதன் மூலம் சசிகலாவின் அரசியல் வாழ்வு முடிந்தது என்றே கூறலாம். அவர் 4 ஆண்டு தண்டனை மற்றும் 6 ஆண்டுகள் கூடுதல் என 10 ஆண்டுகள் தேர்தலில் நிற்க முடியாது.
தீர்ப்பை ஒட்டி நேற்றே கூவத்தூர் வந்த சசிகலா அதிமுக எம்.எல்.ஏக்களுடன் தங்கிவிட்டார். மறுபுறம் ஓபிஎஸ் தரப்பும் தீர்ப்பை எதிர்பார்த்து உள்ளனர். இந்நிலையில் சசிகலாவுக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.