சோ இருந்திருந்தால் தமிழகம் அசிங்கப்படாமல் தடுத்திருப்பார்! எக்ஸ்ட்ராவா சொல்லும் எஸ்.வி.சேகர்!

 
Published : Nov 29, 2017, 10:41 AM ISTUpdated : Sep 19, 2018, 01:30 AM IST
சோ இருந்திருந்தால் தமிழகம் அசிங்கப்படாமல் தடுத்திருப்பார்! எக்ஸ்ட்ராவா சொல்லும் எஸ்.வி.சேகர்!

சுருக்கம்

Journalist Cho - S.Ve. Sekar Twit

பிரதமர் நரேந்திரமோடி, ராஜகுரு என்று அழைக்கப்பட்டவர் துக்ளக் சோ இருந்திருந்தால், தமிழகம் அசிங்கப்படாமல் தடுத்திருப்பார் என்று நடிகரும், பாஜகவைச் சேர்ந்தவருமான எஸ்.வி.சேகர், டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நண்பரும், நம்பிக்கைக்குரியவருமான சோ, ஜெயலலிதா இறந்த மறுநாளே யாரும் எதிர்பாராத வகையில் காலமாணார். மறைந்த சோ குறித்து, நடிகரும், பாஜகவைச் சேர்ந்தவருமான எஸ்.வி.சேகர், சோ இருந்திருந்தால் தமிழகம் அசிங்கப்பட்டிருக்காது என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்கள், எதிபார்ப்புகள் நிகழ்ந்து வருகின்றன. தமிழக பல்வேறு அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக தனது கருத்துக்களை டுவிட்டரில் பதிவிட்டு வருகிறார் எஸ்.வி.சேகர்.

துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் சோ மறைந்து ஓராண்டு நிறைவடைய உள்ளது. இந்த நிலையில் எஸ்.வி.சேகர், தனது டுவிட்டர் பக்கதில், பாரத பிரதமர் மோடி அவர்களை சென்னையில் மிகச் சிறப்பாக அறிமுகப்படுத்திய என் மானசீக குரு சோ என்றும் குறிப்பிட்டள்ளார். 

மேலும், நம் பிரதமர் மோடி அவர்கள் மனதார ராஜகுரு என அழைக்கப்பட்டவர் துக்ளக் சோ மட்டுமே. அவர் இருந்திருந்தால் தமிழகம் அசிங்கப்படாமல் தடுத்திருப்பார். I Miss U CHO Sir என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

எஸ்.வி.சேகரின் இந்த பதிவுக்கு, நெட்டிசன்கள் கலாய்க்கும் வகையில், அசிங்கப்படாமல் எப்படி காப்பாற்றியிருப்பார் என் டுவிட் செய்து வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!