கொரோனா மருந்து பரிசோதனையில் வெற்றி...!! பிரபல நிறுவனம் அதிரடி அறிவிப்பு..!!

By Ezhilarasan BabuFirst Published Mar 31, 2020, 4:24 PM IST
Highlights

இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கான  ஆரம்பகட்ட சோதனைகள்  வெற்றிபெற்ற நிலையில் அதை  மனிதர்களுக்கு பரிசோதிக்கும் சோதனையில்  அமெரிக்கா இறங்கியுள்ளது. 

கொரோனா வைரசை தடுக்கும் மருந்து பரிசோதனை இன்னும் ஒரு சில மாதங்களில் வெற்றிபெற்று அடுத்த ஜனவரி மாதத்தில் அது பயன்பாட்டிற்கு வரும் என ஜான்சன் அண்ட்  ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது . கொரோனா  வைரஸை கட்டுப்படுத்த இதுவரை பிரத்யேக மருந்து இல்லாததால் உலகம் முழுவதும் மனித பேரிழப்பு ஏற்பட்டு வருகிறது .  இந்நிலையில் மருந்து கண்டுபிடிப்பதில் அமெரிக்கா சீனா ,  இஸ்ரேல் ,  ஆஸ்திரேலியா ,  உள்ளிட்ட நாடுகள் அதி தீவிரம் காட்டி வருகின்றன.  இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கான  ஆரம்பகட்ட சோதனைகள்  வெற்றிபெற்ற நிலையில் அதை  மனிதர்களுக்கு பரிசோதிக்கும் சோதனையில்  அமெரிக்கா இறங்கியுள்ளது. 

 

மற்றொருபுறம் சீனாவும் மருந்து கண்டு பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது ,  இந்நிலையில் யார் முதலில் மருந்து அறிவிக்கப் போகிறார்கள் என்ற எதிர் பார்ப்பு எழுந்துள்ளது.  இந்நிலையில் இன்னும் பல நாடுகளை சேரந்து விஞ்ஞானிகள்   கொரோனா வைரஸை தடுக்கும்  மருந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நிறுவனங்களில் ஒன்றான ஜான்சன் அன் ஜான்சன் நிறுவனம் கொரோனாவுக்கு மருந்து கண்டு பிடிக்கும் ஆராய்ச்சியில் வெற்றி கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.  இது குறித்து தெரிவித்துள்ள அந்நிறுவனம்,   கடந்த மூன்று மாத காலமாக  நடைபெற்று வந்த கொரோனா வைரஸ் மருந்து ஆராய்ச்சி மூலம் கொரோனாவை எதிர்க்கும் வகையில்  துல்லியமான மருந்து கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.  எலி பரிசோதனையில் மருந்து  வெற்றி பெற்றுள்ள நிலையில் , வரும் செப்டம்பர்  மாதத்தில் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் அதைத் தொடர்ந்து வரும் 2021 ஜனவரி மாதம் முதல் முறையாக அங்கீகாரம்  பெற்று  மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது. 

 உலகம் முழுவதும் மக்கள் இந்த வைரசுக்கு உயிரிழந்து வரும் நிலையில் மருந்து கண்டுபிடிப்பதில் தங்களது நிறுவனத்தின் சார்பில் மிகுந்த பொருட்செலவில் ஆராய்ச்சி தீவிரமாக நடைபெற்று வருவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.  விரைந்து மருந்து கைக்கு வந்தவுடன் ஒருவர்கூட இந்த வைரசால் உயிரிழக்க  மாட்டார்கள் என்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது .  இந்த மருந்தை கண்டுபிடித்த இதே முறையில் உலகின் மிகக் கொடூரமான வைரஸ்களாகக்  கருதப்படும் ஜிகா வைரஸ் ,  எபோலா ,  எச்ஐவி போன்ற வைரஸ்களுக்கும் மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி தொடரும்  என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது .  இதுவரையில் இந்த மருந்து ஆராய்ச்சிக்காக ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் செலவு செய்யப்பட்டிருப்பதாகவும் இந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. 

 

 

click me!