எங்கள் குடும்பத்திலிருந்து யாரும் அரசியலுக்கோ, அரசு பதவிக்கு வரமாட்டோம். வந்தால் சவுக்கால் அடியுங்கள் எனக் கூறிய ராமதாசை பாமகவின் தான் சவுக்கால் அடிக்க வேண்டுமென ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் தேர்தல் பிரச்சாரம் தீவிரம் அடைந்து வரும் நிலையில், அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய பாமக திடீரென பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. இதனையடுத்து இருதரப்பும் கருத்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில் , இந்த உலகத்திற்கே தெரியும் பாமகவிற்கு யாரால் அங்கீகாரம் கிடைத்தது என, அம்மா( ஜெயலலிதா) இல்லை என்றால் பாமக வெளியே தெரியாது. அங்கீகாரம் கிடைத்திருக்காது. எங்களுடைய முதுகில் ஏறி சவாரி செய்தவர்கள் நிறைய பேர் நாங்கள் யாரும் முதுகில் ஏறி சவாரி செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
பாமக கட்சி ஆரம்பிக்கும் பொழுது அதன் நிறுவனர் ராமதாஸ் கூறினார், எங்கள் குடும்பத்தில் நானோ, எனது வாரிசோ யாரும் அரசியலுக்கு வரமாட்டோம். அரசு பதவிக்கு வரமாட்டோம் வந்தால் சவுக்கு எடுத்து அடியுங்கள் என்று கூறினார்.
எனவே பாமகவினர் தான் சவுக்கை எடுத்து அடிக்க வேண்டும். ஆனால் தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அன்பு மனைவியின் மனைவி சௌமியா போட்டியிடுகிறார். அதேபோல அன்புமணி மத்திய அமைச்சராக இருந்துள்ளார். யாரால் அமைச்சரானார். அன்புமணி என்ற பெயர் யாருக்காவது தெரியுமா.? அன்புமணி என்ற பெயரை இந்தியா முழுவதும் தெரிய வைத்தவர்( ஜெயலலிதா) அம்மாதான். இதெல்லாம் தெரியாமல் பேசுகிறார்கள் இது மக்கள் மன்னிப்பார்களா தொண்டர்களே மன்னிக்க மாட்டார்கள். அதிமுகவுடன் தான் கூட்டணி வைக்க வேண்டும் என பாமக விரும்பியது ஆனால் அதெல்லாம் மாறி திரை மறைவில் நடைபெற்றது மாற்றம். அதை நீங்களே நிரப்பிக் கொள்ளுங்கள் எனக் கூறினார்.
தானம் கொடுத்த மாட்டையே பல்லை பிடித்து பார்ப்பவர் ராமதாஸ். ராமதாசை பொறுத்தவரை பேரம் எங்கு அதிகமாகிறதோ அதற்கு தான் ராமதாஸ் உடன்படுவார். கூட்டணியாவதுவெங்காயமாவது அப்படி சென்று விடுவார். தேர்தல் நேரத்தில் பாமகவின் எதிர்பார்ப்புக்கு யார் உடன்படுகிறார்களோ அவர்களோடு தான் கூட்டணி வைப்பார்கள் எனவே பாமகவின் எதிர்பார்ப்புக்கு நாங்கள் உடன்படவில்லை. எனவே உடன்பட்டர்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டுள்ளார்கள்.
பாமகவிற்கு கட்சி அங்கீகாரத்தை கொடுத்தது அதிமுக, அன்புமணி மந்திரியானது அதிமுக, சட்டமன்றத்தில் பாமகவிற்கு 5 எம்எல்ஏ உள்ளார்கள். தனித்து நின்று ஒரு எம்எல்ஏவாக வெற்றி பெற முடியுமா.? தனியா நின்று தேர்தலை சந்திக்க வேண்டியது தானே.? தனியாக நின்று ஒரு எம்எல்ஏ கூட வர முடியாது அவர்கள் வாய் மட்டும் பேசுகிறார்கள் என்ன பாமகவை ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்தார்.