மணல் பதுக்கினால் 2 ஆண்டு சிறை, ரூ 2 லட்சம் அபராதம்: ஜெகன்மோகன் அரசு அதிரடி உத்தரவு

By Selvanayagam PFirst Published Nov 14, 2019, 8:13 AM IST
Highlights

ஆந்திர மாநிலத்தில் மணல் கடத்தி பதுக்குவோருக்கு 2 ஆண்டு கடுங்காவல் சிறையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்று முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து ஆந்திர மாநில தகவல் மற்றும் மக்கள்தொடர்புத்துறை அமைச்சர் பெர்னி வெங்கடராமையா அமராவாதியில் நிருபர்களிடம் கூறுகையில் “ 14-ம் தேதிமுதல் மணல்வாரம் என்ற தி்ட்டத்தை ஆந்திர மாநில அரசு அறிமுகப்படுத்துகிறது. 

இந்ததிட்டத்தில் நாள்ஒன்றுக்கு 2லட்சம் டன் மணல் கிடைக்க உறுதி செய்வோம். இந்த திட்டத்தில் அரசிடம் இருந்து அதிகமான அளவு மணலைப்பெற்று பதுக்கினாலும், அதிகமான விலைக்கு விற்றாலும் அவர்களுக்கு ரூ.2 லட்சம் அபராதம், 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்

ஆந்திராவில் ஒன்றாம் வகுப்பு முதல் 6-ம் வகுப்பு வரை அனைத்துப்பள்ளிகளிலும் ஆங்கிலக் கல்விமுறை கொண்டுவந்துள்ள முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு வாழ்த்துத்தெரிவிக்கப்பட்டது. இந்த உத்தரவு அடுத்த கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வரும்.அதேசமயம் தெலுங்கு அல்லது உருது மொழியும்கண்டிப்பாக இடம் பெறும்” எனத் தெரிவித்தார்

click me!