ஆந்திர முதலமைச்சராக 30 ஆம் தேதி பதவி ஏற்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி !! அமைச்சராககிறார் நடிகை ரோஜா !!

Published : May 25, 2019, 11:07 PM IST
ஆந்திர முதலமைச்சராக 30 ஆம் தேதி பதவி ஏற்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி !! அமைச்சராககிறார் நடிகை ரோஜா !!

சுருக்கம்

ஆந்திர பிரதேசத்தில் பட்டையக் கிளப்பி  பெரு வெற்றி பெற்ற ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ்  கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி  வரும் 30 ஆம் தேதி அம்மாநில முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார். அவரது அமைச்சரவையில் நடிகை ரோஜாவுக்கும் இடம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திராவில் அண்மையில்  நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 151 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆளும் கட்சியான தெலுங்கு தேசம் வெறும் 23 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த நிலையில்,  ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி அமைக்க ஆந்திர ஆளுநர் நரசிம்மன் அழைப்பு விடுத்துள்ளார். 

வரும் 30 ஆம் தேதி பிற்பகல் 12.23 மணிக்கு விஜயவாடாவில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் ஆந்திர பிரதேச முதல்-மந்திரியாக ஜெகன்மோகன் ரெட்டியும் அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர். ஜெகன்மோகனின் அமைச்சரவையில் நடிகை ரோஜாவும் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராயலசீமா மண்டலம்  சித்துார் மாவட்டத்திற்கு உட்பட்ட நகரி தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நடிகை ரோஜா 2-வது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

ரோஜா தன்னை எதிர்த்து போட்டியிட்ட தெலுங்கு தேசம் வேட்பாளர் காளி பானு பிரகாஷை 2,681 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். ரோஜாவுக்கு 79,499 வாக்குகளும், காளி பானு பிரகாசுக்கு 76,818 வாக்குகளும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

Dhanush: தனுஷின் அரசியல் என்ட்ரி.! தலைவராக ரஜினி, பொதுச்செயலாளராக தனுஷ்? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!