வேதா இல்லத்தை நினைவிடமாக்கக்கூடாது - ஜெ.தீபா உயர்நீதிமன்றத்தில் மனு..!

 
Published : Oct 06, 2017, 09:43 PM ISTUpdated : Sep 19, 2018, 01:16 AM IST
வேதா இல்லத்தை நினைவிடமாக்கக்கூடாது - ஜெ.தீபா உயர்நீதிமன்றத்தில் மனு..!

சுருக்கம்

Jayapeeya has filed a suit against the Chennai High Court to ban the former residence of former Chief Minister Jayalalitha to be remembered as a memorial home.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தடை விதிக்க வேண்டும் என ஜெ.தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

எனது பாட்டி சந்தியா போயஸ் கார்டனில் வேதா நிலையம் என்ற வீட்டை விலைக்கு வாங்கினார். அந்த வீட்டில் தான் எனது தந்தை ஜெயராமனும், அத்தை ஜெயலலிதாவும் வசித்தனர். 

பாட்டியின் மறைவுக்கு பிறகு இந்த வீடு அத்தை ஜெயலலிதா பெயருக்கு மாற்றப்பட்டது. நானும் எனது தம்பி தீபக்கும் படிப்புக்கு தி.நகர் வீட்டுக்கு குடியேறினோம். 

இந்நிலையில் எனது அத்தை ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் மரணம் அடைந்தார். அவருக்கு நானும், எனது தம்பி தீபக்கும்தான் நேரடி வாரிசுகள். 

அத்தை ஜெயலலிதா உயிரோடு இருந்த போது போயஸ் கார்டன், கொடநாடு, ஐதராபாத் உள்ளிட்ட பல இடங்களில் சொத்துக்களை வாங்கியுள்ளார்.

இந்த சொத்துக்கள் எல்லாம் எனக்கும், தம்பி தீபக்குக்கும்தான் சொந்தம். இந்த நிலையில் ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் வீட்டை நினைவிடமாக அரசு அறிவித்துள்ளது. 

இதை எதிர்த்து முதல்-அமைச்சர், தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு கடிதம் கொடுத்தேன். எனது கோரிக்கை பரிசீலிக்கப்படவில்லை. 

எனவே ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக அறிவித்த அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

PREV
click me!

Recommended Stories

தேவாலயத்திற்குச் சென்று கிறிஸ்துமஸ் பிரார்த்தனையில் பங்கேற்ற பிரதமர் மோடி..!
தேர்தல் செலவுக்கு மண் திருடும் மாஃபியாக்கள்..! ஸ்வீட்பாக்ஸில் கொழிக்கும் அதிகாரிகள்..!