
ஜெயலலிதா உடல்நிலை குறித்து ஆரம்பத்திலேயே கண்காணிக்காமல் இருந்தது வருத்தம் அளிக்கிறது எனவும் ஒரு முதலமைச்சரின் வீட்டில் அவசர ஆம்புலஸ் நிறுத்தி வைக்கப்படாதது ஏன் எனவும் பாஜக மாநில தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில், தற்போது ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது தயாரிக்கப்பட்ட பேஷண்ட் கேர் ரிப்போர்ட்டின் தகவல்கள் வெளியாகி உள்ளனர்.
அதில், செப்டம்பர் 22 ஆம் தேதி இரவு 10 மணிக்கு போயஸிலிருந்து அப்பல்லோவுக்கு அழைப்பு போயுள்ளதும் 10.01 க்கு மூன்று மருத்துவர்கள் அடங்கிய ஆம்புலன்ஸ் அப்பல்லோவிலிருந்து போயஸ் நோக்கி கிளம்பியதும் தெரிய வந்துள்ளது.
இரவு 10.05 க்கு ஆம்புலன்ஸ் போயஸ் கார்டனை வந்தடைந்த போது, போயஸ் கார்டன் இல்லத்தின் முதல்மாடியில் தனது அறையில் மயங்கிய நிலையில் ஜெயலலிதா இருந்திருக்கிறார்.
இதையடுத்து ஜெவிற்கு பரிசோதனை செய்யப்படுகிறது. அப்போது, ஜெயலலிதாவின் பிபி அளவு 140/70 ஆகவும், சாச்சுரேஷன் 48 ஆகவும், இருந்திருக்கிறது. சர்க்கரையின் அளவு 508 ஆக இருந்ததாக ரிப்போர்ட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆனால் ஜெவின் உடலில் காயங்களோ புண்களோ இல்லை என குறிப்பிடபட்டிருக்கிறது. மேலும் பிரீத்திங் அளவு நார்மல் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.
10: 25க்கு ஜெயலலிதாவுடன் ஆம்புலன்ஸ் மூலம் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா.
இந்நிலையில், இதுகுறித்து பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறுகையில், ஜெயலலிதா உடல்நிலை குறித்து ஆரம்பத்திலேயே கண்காணிக்காமல் இருந்தது வருத்தம் அளிக்கிறது எனவும் ஒரு முதலமைச்சரின் வீட்டில் அவசர ஆம்புலஸ் நிறுத்தி வைக்கப்படாதது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.
ஜெயலலிதாவுக்கு ஏர்கனவே உடல்நிலை சரியில்லாதவர் என்பது தெரிந்தும் அவரின் சிகிச்சைக்கான முன்னேற்பாடுகள் என்ன ஆனது எனவும், அவர் மிகவும் சீரியஷான கண்டிஷனுக்கு செல்லும் வரை அனுமதித்தது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
வீட்டில் சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்களுக்கு உடல் நிலை மோஷமாகி கொண்டிருப்பது தெரியவில்லையா எனவும், வீட்டில் ஆக்ஸிஜன் சிலிண்டர் வைக்கப்படாதது ஏன் எனவும் வினவியுள்ளார்.
சர்க்கரையின் அளவு, பிபி அளவு நார்மலாக இல்லாதபோது பிரீத்திங் மட்டும் எப்படி நார்மலாக இருந்திருக்க முடியும் என தமிழிசை கேள்வி எழுப்பினார்.