பினாமி கட்சியான அமமுகவையே ஜெயிக்கவைக்க முடியல.. இவங்க அதிமுகவை கைப்பற்றப்போறாங்களா? சீறிய சி.வி.சண்முகம்.!

By vinoth kumarFirst Published Jun 30, 2021, 7:29 PM IST
Highlights

டிடிவி தினகரனை வைத்து பினாமி கட்சி ஒன்று ஆரம்பித்தார்களே சசிகலா, அந்த கட்சியையே அவர்களால் வெற்றி பெற வைக்க முடியவில்லை. இவங்க அதிமுகவை கைப்பற்றி விடுவார்களா, அதிமுக தொண்டர்களை தவிர யாரையும் நம்பி இல்லை.

நீட் தேர்வு ரத்து என்ற பெயரில் திமுக அரசு மாணவர்களை ஏமாற்றி வருகிறது என  முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.

விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய அரசு குழு அமைத்துள்ளது ஏமாற்றுவேலை. நீட் தேவையில்லை என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. நீட் தேர்வு வேண்டாம் என்று நாடாளுமன்றத்தில் தான் சட்டம் இயற்ற வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. நீட் தேர்வு ரத்து என்ற பெயரில் திமுக அரசு மாணவர்களை ஏமாற்றி வருகிறது என குற்றம்சாட்டியுள்ளார். 

மேலும், டிடிவி தினகரனை வைத்து பினாமி கட்சி ஒன்று ஆரம்பித்தார்களே சசிகலா, அந்த கட்சியையே அவர்களால் வெற்றி பெற வைக்க முடியவில்லை. இவங்க அதிமுகவை கைப்பற்றி விடுவார்களா, அதிமுக தொண்டர்களை தவிர யாரையும் நம்பி இல்லை. சசிகலா, அம்மா வீட்டிற்கு வேலை செய்ய வந்தவர்கள். அம்மா இப்போது இல்லை. இவங்க வேலையும் முடிஞ்சு போச்சு அவ்வளவுதான். தற்போது வலுவான எதிர்க்கட்சியாக அதிமுக உள்ளது. அதிமுகவிற்கும், திமுகவிற்கும் 3 சதவீத வாக்கு வித்தியாசம்தான்.

தற்போது மின்சார வாரியம் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டுள்ளது. எல்லா அணில்களையும் பிடித்துவிட்டார்கள். இனிமேல் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என  சி.வி.சண்முகம் கூறியுள்ளார். 

click me!