
சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவது குறித்து மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் தலைமையில் 2 வது முறையாக ஆய்வு நடைபெற்று வருகிறது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டிசம்பர் மாதம் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது சொத்துகளுக்கு நேரடி வாரிசு யாரும் இல்லாததால் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் மகனான தீபாவும் தீபக்கும் உரிமை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் எடப்பாடி தலைமையிலான ஆட்சி வந்ததும் டிடிவி தரப்பு ஓரங்கட்டப்பட்டனர். ஆனால் பிரிந்து சென்ற ஒபிஎஸ் அணியினர் எடப்பாடியுடன் கூட்டு சேர்ந்தனர்.
இதைதொடர்ந்து காலம் காலமாக அதிமுகவில் இருந்து வந்த பொதுச்செயலாளர் பதவியை நீக்கிவிட்டு கட்சி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவியை உள்ளே புகுத்தினர் ஒபிஎஸ், இபிஎஸ்.
மேலும் ஜெயலலிதா வாழ்ந்து வந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியிட்டனர்.
ஆனால் இதற்கு தனி சொத்தான வேதா இல்லத்தை அரசு கையகப்படுத்த முடியாது என ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவது குறித்து மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் தலைமையில் 2 வது முறையாக ஆய்வு நடைபெற்று வருகிறது.