ஜெயலலிதா நினைவில்லம்... தனியாக அக்கறை காட்டும் எடப்பாடி பழனிசாமி..!

Published : Nov 27, 2020, 05:53 PM IST
ஜெயலலிதா நினைவில்லம்... தனியாக அக்கறை காட்டும் எடப்பாடி பழனிசாமி..!

சுருக்கம்

 நினைவிடத்தின் உள்ளே, ஒரு கண்காட்சியகம் அமைக்க வேண்டும் என அவர்கள் சொன்னதும், அதையும் செய்ய சொல்லி இருக்கிறர். கூடவே, நினைவிடத்தை ஐந்தாண்டுகள் வரை தொடர்ச்சியாக பரமாரிக்கும் பணியை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

'வேதா நிலையம்' இல்லத்தை நினைவில்லமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான 'புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை' அமைக்கவும், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவசர சட்டத்தைப் பிறப்பித்துள்ளார்.

இந்த அறக்கட்டளையின் தலைவராக முதல்வரும், துணை முதல்வர், தகவல் மற்றும் விளம்பரத்துறை அமைச்சர், அரசு அதிகாரிகள் உறுப்பினர்களாகவும், தகவல் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குநர் உறுப்பினர் செயலாளராகவும் உள்ளனர். ஜெயலலிதா நினைவிடத்தை சிறப்பாக அமைப்பதில் முதல்வர் பழனிச்சாமி, தனிப்பட்ட முறையில் ஆர்வம் காட்டி வருகிறார்.

 

பொதுப் பணித் துறை செயற்பொறியாளர் ஆயிரத்தரசு ராஜசேகரனிடம், நினைவிடம் அமைக்கும் பணியை கொடுத்த முதல்வர், துபாய் போன்ற நாடுகளுக்குச் சென்று, அங்கிருக்கும் நினைவிடங்களை பார்வையிட்டு வரச் சொல்லியிருக்கிறார். நினைவிடத்தின் உள்ளே, ஒரு கண்காட்சியகம் அமைக்க வேண்டும் என அவர்கள் சொன்னதும், அதையும் செய்ய சொல்லி இருக்கிறர். கூடவே, நினைவிடத்தை ஐந்தாண்டுகள் வரை தொடர்ச்சியாக பரமாரிக்கும் பணியை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

PREV
click me!

Recommended Stories

இந்தியாவை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை... கடைசியில் மண்டியிட்ட வங்கதேசம்..!
ஹமாஸை ஒழிப்பதில் நாங்களே தலைமை தாங்குவோம்.. அமெரிக்காவிடம் அடம்பிடிக்கும் பாகிஸ்தான் இராணுவம்..!