சிபிஐயிடம் திமுக மனு... அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனுக்கு சிக்கல்...

By vinoth kumarFirst Published Oct 18, 2019, 4:43 PM IST
Highlights

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கைரேகை விவகாரத்தில் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிபிஐயிடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கைரேகை விவகாரத்தில் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிபிஐயிடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

2016-ம் ஆண்டு திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி தேர்தலின் போது, அதிமுக சார்பில் வழங்கப்பட்ட வேட்பு மனுவின், பி வடிவத்தில், ஏ.கே.போஸ் வேட்பாளராக முன்மொழியப்பட்டு, அதில் ஜெயலலிதா கைரேகை இடம் பெற்றிருந்தது. சுயநினைவு இல்லாமல் இருந்த ஜெயலலிதா எப்படி கைரேகை வைத்திருக்க முடியும் என்று திமுக வேட்பாளர் சரவணன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஜெயலலிதாவின் கைரேகை சந்தேகத்திற்குரியதாக இருப்பதாகவும், சட்டவிரோதமானது என்றும் தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. சரவணன் மனு அளித்துள்ளார். அதில், கடந்த 2016-ம் ஆண்டு திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலின் போது, அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட தேர்தல் விண்ணப்ப படிவத்தில் உள்ள அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் கைரேகை செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார். 

மேலும், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அடிப்படையாக கொண்டு ஜெயலலிதாவின் கைரேகையை அங்கீகரித்த அப்போதைய தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, மாவட்ட தேர்தல் அதிகாரி வீரராகவராவ், தேர்தல் நடத்தும் அதிகாரி ஜீவா, ஜெயலலிதாவுக்கு உதவியாக இருந்த சசிகலா, அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், அரசு மருத்துவர் பாலாஜி மற்றும் அப்பல்லோ மருத்துவர்கள் உள்ளிட்டோர் மீது கிரிமனல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

click me!