ஜெயலலிதாவின் ஆவியை கட்டிப்போட முயன்றார் சசி! மன்னார்குடி குடும்பத்தை வெச்சு செய்யும் ஆன்மா : வேங்கடசர்மா வைக்கும் வேட்டு ...

By Vishnu PriyaFirst Published Jan 18, 2020, 5:22 PM IST
Highlights

நான் சொல்வதை மற்றவர்கள் வேடிக்கையாக எடுக்கலாம், ஆனால் சசியின் குடும்பத்தினருக்கு இது முழு உண்மை என்பது தெரியும். சசிக்கு நெருக்கமாக இருந்த அமைச்சர்கள் ஒவ்வொருவரையும் வட்டமிட்டு வாட்டி வருகிறது ஜெயலலிதாவின் ஆவி. 

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் பவ் (எ) வெங்கடேசன் சாலை விபத்தில் கோரமாக பலியான சம்பவம், அ.தி.மு.க.வினுள் பெரும் பதற்றத்தைக் கிளப்பியிருக்கிறது. அமைச்சர்களின் உதவியாளர்கள் வரிசையாக ஒவ்வொருவராய் மரணிப்பது ’ஜெயலலிதாவின் ஆவி செய்யும் சேட்டைகள்’ என்று அக்கட்சியினுள் பதற்றத்தைக் கிளப்பியுள்ளது. இந்த நிலையில், ஜெ., இறந்த சில நாட்களில் ’ஜெயலலிதாவின் ஆத்மா சாந்தியடையவில்லை. நிம்மதி இல்லாமல் அலையும் அந்த ஆத்மாவினால் துயரஙகள் தொடரும்!’ என்று ஒரு பட்டாசை கொளுத்திப் போட்டார் வேங்கட சர்மா எனும் ஜோதிடர். ஜெ.,வின் ஆவியிடம் பேசுவதாக சொல்லி அவர் கிளப்பிய பரபரப்புகளெல்லாம் வேற லெவல் ரகம். 
இந்த நிலையில், அமைச்சர்களின் பி.ஏ.க்கள் தொடர்ந்து இப்படி விபத்தில் மரணிப்பது குறித்துப் பிரபல வாரம் இருமுறை புலனாய்வு இதழ் ஒன்றில் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. 

அதில் பேட்டி அளித்திருக்கும் வேங்கடசர்மா பெரிய வேட்டு கொளுத்திப் போட்டிருக்கிறார் இப்படி....“ஜெயலலிதாவின் ஆவி இருக்கிறது என்று முதன் முதலில் சொன்னவன் நான் தான். அந்த ஆத்மா இப்போது உக்கிர நிலையில் இருக்கிறது. இப்போது அந்த ஆத்மா இருக்காட்டு சித்தர், பாம்பாட்டி சித்தரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதனால் ஜெயலலிதாவின் ஆன்மாவிடம் பேச முடியவில்லை. சசிகலாவின் குடும்பத்தில் மகாதேவன், நடராஜன், சசியின் அண்ணி என்று மூன்று உயிர்கள் அடுத்தடுத்து காவு வாங்கப்பட்டன. இது நடந்ததும் அவசர அவசரமாக கேரள நம்பூதிரிகளை வைத்து ஜெயலலிதாவின் ஆவியைக் கட்டப் பார்த்தனர். ஆனால் அந்த முயற்சி முழு வெற்றியடையவில்லை. ஜெயலலிதாவின் ஆவியால் அதிகம் பாதிக்கப்படுவது சசிகலாதான். ஆம், சசி வீட்டில் தொடர்ச்சியான கெட்ட சம்பவங்கள்தான் நடந்து வருகிறது. ஐ.டி.  ரெய்டில் துவங்கி ஏகப்பட்ட சரிவுகள். அதை மீட்க யாரிடம் அவர்கள் சென்றாலும் நன்மை கிடைப்பதில்லை.  

நான் சொல்வதை மற்றவர்கள் வேடிக்கையாக எடுக்கலாம், ஆனால் சசியின் குடும்பத்தினருக்கு இது முழு உண்மை என்பது தெரியும். சசிக்கு நெருக்கமாக இருந்த அமைச்சர்கள் ஒவ்வொருவரையும் வட்டமிட்டு வாட்டி வருகிறது ஜெயலலிதாவின் ஆவி. தற்போது பலியான உயிர்களின் கால, நேர, தேதிகளை பார்த்தாலே அந்த விபரீதம் புரியும். ஜெ., ஆன்மாவை சாந்தப்படுத்த சில ஹோமங்கள் நடத்த வேண்டும். அதுவும் தற்காலிக தீர்வை தருமே தவிர, நிரந்தர தீர்வை தராது. அதையும் செய்யாமல் போய், இந்த நிலையே தொடர்ந்தால், ஜெயலலிதாவின் ஆவி இன்னும் இன்னும் உக்கிரமேறிக் கொண்டே போகும். அதன் விளைவை அக்கட்சியின் முக்கியத்தினர்களால் தாங்கவே முடியாது.” என்று நிறுத்தியிருக்கிறார். ஆத்தாடி ஆத்தா!

click me!