கர்நாடக, ஓடிசா, புதுச்சேரி முதல்வர்கள் அஞ்சலி

Asianet News Tamil  
Published : Dec 06, 2016, 03:50 PM ISTUpdated : Sep 19, 2018, 02:34 AM IST
கர்நாடக, ஓடிசா, புதுச்சேரி முதல்வர்கள் அஞ்சலி

சுருக்கம்

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். 

நீர்ச்சத்து குறைபாட்டால், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இதயம் செயல் இழப்பால், நேற்று இரவு மரணமடைந்தார். 

சென்னை, ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு பிரதரமர் மோடி, கவர்னர் வித்தியாசாகர் ராவ்  உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கில் தெரிவிக்கும் வகையிலும், அந்த சோகத்தில் தாங்களும் பங்கு கொள்ளும் வகையில், அண்டை மாநிலங்களான கர்நாடாக, புதுச்சேரியில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுஇருந்தது.

இதையடுத்து, ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, முன்னாள் பிரதமர் தேவே கவுடா, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக், மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா ஆகியோர் நேரில் வந்து மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 

PREV
click me!

Recommended Stories

தூக்கத்திலும் நடுக்கம்... படுக்கையிலும் குண்டு துளைக்காத ஜாக்கெட் அணியும் பாகிஸ்தான் அசிம் முனீர்..!
உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்காகத்தான்.. மேடையிலேயே கண் கலங்கிய செங்கோட்டையன்..!