அத்தையை காண ஆவலுடன் காத்திருக்கிறேன் – ஜெ. அண்ணன் மகள் கண்ணீர் பேட்டி

Asianet News Tamil  
Published : Oct 07, 2016, 02:37 AM ISTUpdated : Sep 19, 2018, 03:10 AM IST
அத்தையை காண ஆவலுடன் காத்திருக்கிறேன் – ஜெ. அண்ணன் மகள் கண்ணீர் பேட்டி

சுருக்கம்

முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 22ம் தேதி முதல் சென்னை கிரீம்ஸ் ரேட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சமீபத்தில் லண்டனில் இருந்து வந்த டாக்டர் ரிச்சர்ட், அவரது பரிசோதனைகளை ஆய்வு செய்து, அதற்குறிய சிகிச்சை அளிக்க வேண்டும் என டாக்டர்களுக்கு அறிவுறுத்தினார். அதன்படி அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதை தொடர்ந்து, முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, அவ்வப்போது, மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில், தனது அத்தையும், முதலமைச்சருமான ஜெயலலிதாவை சந்திக்க அனுமதிக்க மறுத்துவிட்டதாகவும், மருத்துவமனையின் உள்ளே நுழைய விடாமல் தடுத்த்தால், திரும்பி விட்டதாகவும் ஜெயலலிதாவின் சொந்த அண்ணன் ஜெயகுமாரின் மகள் தீபா கூறியுள்ளார்.

சென்னை தி.நகரை சேர்ந்தவர் தீபா. ஆங்கில இலக்கியம் மற்றும் இதழியல் படித்துள்ளார். இவரது சகோதரர் தீபக் எம்.பி.ஏ முடித்துவிட்டு ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர்கள் முதல்வர் ‘ஜெயலலிதாவின் சொந்த அண்ணன் ஜெயகுமாரின் மகள், மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவை பார்க்க, கடந்த சில நாட்களுக்கு முன் தீபா சென்றுள்ளார். ஆனால், அவரை உள்ளே விடவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர், பத்திரிகை ஒன்றில் அளித்த பேட்டி.

என் மீது எனது அத்தைக்கு அதிக பாசம் உள்ளது. மருத்துவமனையில் உள்ள அவரை சந்திக்கும்போது, அவருடைய கையைப் பிடித்து ‘‘உங்களுக்கு ஒன்றும் ஆகாது. நீங்கள் விரைவில் குணமடைந்து விடுவீர்கள். மீண்டும் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பல விஷயங்கள் குறித்து பேசுவீர்கள்” என ஆறுதல் கூற ஆசைப்படுகிறேன்.

ஆனால், மருத்துவமனைக்கு நான் சென்றபோது, எனது அத்தையை, நான் சந்திக்க, யாரும் அனுமதிக்கவில்லை. எனது அத்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட விஷயத்தை நான் பத்திரிகைகள் மற்றும் டிவி மூலமாக  அறிந்தேன்.

இதையடுத்து, தொடர்ந்து 3 நாட்கள், தினமும் மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு நுழைவாயிலில், உள்ளே செல்ல அனுமதி கேட்டேன். ஆனால்,அவரை பார்க்க எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. என்னை,அங்கிருந்தவர்களும் நான் எதோ அரசியல்வாதியின் சொந்தம் என நினைத்தார்க்ள்.

என்னை உள்ளேவிட்டால், என்னை வேலையை விட்டு தூக்கி விடுவார்கள் என கூறினார்கள். அதற்கு நான், இந்த இடத்தை தவிட்டு போக மாட்டேன் என பிடிவாதமாக அங்கேயே நீண்ட நேரம் காத்து கிடந்தேன்.

அப்படி கூறியும், என்னை யாரும் அனுமதிக்கவில்லை. என்னை உயர் அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேசுவார்கள் என கூறி, அங்கிருந்து என்னை அனுப்பிவிட்டனர். ஆனால், இதுவரை யாரும் என்னை அழைக்கவில்லை.

எங்களுடைய அப்பா கடந்த 1995ம் ஆண்டு இறந்தார். அப்போது, எனது அத்தை எங்களது வீட்டுக்கு வந்தார். கடந்த 2012ம் ஆண்டில் எனது அம்மா விஜயலட்சுமி உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தபோது, என்னால் எனது அத்தையை தொடர்பு கொள்ள முடியவில்லை.

எனது அத்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு 2 வாரங்கள் ஆகிறது. அவருக்கு என்ன நடந்தது என்று இதுவரை யாருக்கும் தெரியவில்லை. இது மிகவும் மோசமான சூழ்நிலை. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். யார் இந்த ரகசியத்துக்கு பின்னணியில் உள்ளனர் என்பதை கண்டறிய வேண்டும் என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

AIADMK Rift: மன்னிப்பு கடிதம் வழங்கிய எஸ்.பி.வேலுமணி தரப்பு.. சிவி சண்முகம் மிஸ்சிங்
TN Govt Scheme: தங்கைகளுக்கு கிடைக்கப்போகும் 8 கிராம் தங்கமும், பட்டுப்புடவையும்.! ஜூன் மாதம் முதல் அண்ணன் சீர் திட்டம் நடைமுறை?!