
முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும், இந்திய பிரஸ் கவுன்சில் முன்னாள் தலைவருமான மார்கண்டேய கட்ஜு முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளமான பேஸ்புக்கில் ஜெயலலிதாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ள கட்ஜு, எப்போதும் தாக்கும் கருணாநிதியை இந்த முறையும் மறைமுகமாக தாக்கியுள்ளார்.
ஜெயலலிதா எனும் பெண் சிங்கத்திற்கு எதிராக திரளும் ‘லங்கூர்’ வகை குரங்குகள் போல் எதிரிகள் உள்ளனர் என மறைமுகமாக திமுகவினர் உள்ளிட்டோரை சாடியுள்ளார்.
இருப்பினும் வெகு விரைவில் அவர் குணமடைந்து தனது அன்றாட பணிகளுக்கு திரும்ப வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பல சுவாரஸ்யமான தனது மலரும் நினைவுகளை தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். தான் இளைஞனாக இருந்தபோது, ஜெயலலிதா மிக இளம் பெண்ணாக இருந்தார்.
அவர் மிகவும் கவர்ந்திழுக்க கூடிய வகையில் இருந்ததால் அவர் மீது பெரும் ஈர்ப்பு இருந்தது. ஆனால் இதைப்பற்றியெல்லாம் அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அது ஒரு தலை காதலாகும்.
இன்றும் அவர் கவரக்கூடிய சக்தியுடன் உள்ளார். அவர் மீதான ஈர்ப்பு இன்றும் உள்ளது. அவர் விரைவில் குணமடைய மீண்டும் வாழ்த்துக்கிறேன் என மார்க்ண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார்.