
சென்னை அரும்பாக் கத்தை சேர்ந்தவர் பி.ஏ.ஜோசப். அ.தி.மு.க. தொண்டரான இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மர்மமான முறை யில் மரணமடைந்துள்ளார். அவரது மறைவில் பல்வேறு சந்தேகங் கள் மக்கள் மத்தியில் நிலவுகிறது. சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக மீண்டும் வெற்றி பெற்று, ஜெயலலிதா ஆட் சிக்கு வந்த 4 மாதங்களில், உடல் நலம் பாதிக்கப்பட்டு, அவர் மரணம் அடைந் துள்ளது மிகப் பெரிய சந்தே கத்தை ஏற்படுத்தியுள் ளது.
நல்ல உடல் ஆரோக்கியத் துடன் இருந்த ஜெயலலிதா, திடீரென இரவோடு இர வாக, செப்டம்பர் 22ம்ந் தேதி மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார். அப்போது அவருக்கு காய்ச்சல், 2 நாட்களில் வீடு திரும்பி விடுவார் என்று செய்திகள் வெளியாகின. அதன்பின்னர் செப்டம்பர் 24ம் தேதி சிகிச்சைக்காக ஜெயலலிதாவை வெளிநாடு செல்ல இருதாக தகவல்கள் வெளி யாகின. ஆனால், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகமோ, ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார் என்று அறிக்கை வெளியிட்டது.
இதற்கிடையில் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து வெளியாகும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்தார். ஆனால், இப்படி கோரிக்கை விட அவருக்கு உரிமை இல்லை என்று அ.தி.மு.க. நிர்வாகி பண்ருட்டி ராமச்சந்திரன் பதிலளித்தார்.
அதேபோல, ஜெயலலிதா சிகிச்சை பெறும் புகைப் படத்தை வெளியிட அவசியமில்லை என்று அ.தி.மு.க. தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டு டாக்டர்கள், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் ஆகியோர் சிகிச்சை அளித்தனர்.
இதனால் ஜெயலலிதா குணமடைந்து வீடு திரும்புவார் என்று அ.தி.மு.க. தொண்டர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், கடந்த 5ம் தேதி திடீரென ஜெயலலிதா இறந்து விட்டதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. இதில் பெரும் சந்தேகம் உள்ளது. இறப்பு அறிவிப்பு வெளியாவதற்கு சில மணி நேரத்தில் அவசர அவசரமாக முதலமைச்சர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ஏற்றார். இது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
கடந்த மே மாதம் நடந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று, ஜெயலலிதா பதவி ஏற்றார். அப்போது ஆரோக்கியமாக அவர் இருந்தார். பதவி ஏற்று 4 மாதங்களில் அவர் திடீரென மர்மமான முறையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு, பல நாட்கள் சிகிச்சைக்கு பின் அவர் இறந்ததாக அறிவிக் கப்பட்டுள்ளது.
அதிலும், ஜெயலலிதாவின் இருகால்களையும் அகற்றி விட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஜெயலலிதாவின் உடலை பதப்படுத்தியுள்ளனர். எதற் காக அவரது உடல் பதப்படுத்தப்பட்டது என்பதற்கு எந்த விளக்கமும் இல்லை.
எனவே, ஜெயலலிதாவின் மரணத்தில் பெரும் சந்தேகம் உள்ளது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாவில் சந்தேகம் இருப்பதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம், நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிட்டது. அதுபோல, மிகப் பெரிய தலைவரான ஜெயலலிதாவின் சாவிலும் மர்மம் உள்ளது.
இதுகுறித்து, விசாரிக்க உச்சநீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதிகள் 3 பேர் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். இந்த விசாரணை முடியும் வரை, மெரினா கடற்கரையில் புதைக்கப்பட்டுள்ள ஜெய லலிதாவின் உடலை பாதுகாக்க ஒரு குழுவை அமைக்க வேண்டும்.
அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவர ஆவணங்களை இந்த ஐகோர்ட்டு அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர் வாகத்திடம் இருந்து பெற்று, பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், வி.பார்த்திபன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் முத்துகுமாரசாமி, மத்திய அரசு சார்பில் மதன கோபால்ராவ், மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் கே.எம்.விஜயன் ஆகியோர் ஆஜரானார்கள்.
வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் கூறுகையில், ஜெயலலிதாவுக்கு வழங்கப் பட்ட சிகிச்சை என்ன என்பது உள்ளிட்ட விஷயங்களுக்குள் போக நாங்கள் (நீதிபதிகள்) விரும்பவில்லை. ஒவ்வொரு குடிமகனுக்கும் வாழ்வதற்காக அடிப்படை உரிமையை அரசியல் சட்டம் வழங்கி பாதுகாக்கிறது.
ஜெயலலிதா எப்படி இறந்தார் என்ற விவரம் பொதுமக்களுக்கு தெரியவேண்டும். ஜெயலலிதாவின் சாவில் மர்மம் உள்ளது என்று யார் வேண்டுமானாலும் சந்தேகப்படலாம். அதுகுறித்து அவர்கள் கேள்வி கேட்கலாம். ஜெயலலிதா சாவில் மர்மங்கள் உள்ளன என்று பொதுமக்கள் சந்தேகப்படுகின்றனர். தனிப்பட்ட முறையில் ஜெயலலிதாவின் சாவில் எனக்கும் பல சந்தே கங்கள் உள்ளன. பத்திரிகைகளில் பலவிதமான செய்திகள் வந்தன. ஜெயலலிதா நடந்தார் என்று சிலர் பேட்டி கொடுத்தனர். ஜெயலலிதா டி.வி. பார்க்கிறார் என்று மற்றொரு நாள் மற்றொருவர் பேட்டி கொடுக்கிறார். அடுத்த சில நாட்களில் ஜெயலலிதா வீடு திரும்புவார் என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியது.
இதேபோல. எம்.ஜி.ஆர். வெளிநாட்டில் சிகிச்சை பெற்றபோது, அது தொடர்பான வீடியோ, புகைப்படம் பத்திரிகைகளுக்கு வழங்கப்பட்டன. அவர் நன்றாக இருக்கிறார் என்று பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது. ஏன் அப்படி ஒரு நிலை ஜெயலலிதா விஷயத்தில் இல்லை? சாதாரண ஒரு குடிமகன் என்ற முறையில், ஜெயலலிதாவின் சாவில் எனக்கும் பல சந்தேகங்கள் உள்ளன.
அனைத்து விவரங்களும் மத்திய அரசுக்கு தெரியும். ஆனால், அதுகுறித்து வாய் திறப்பது இல்லை. மக்களுக்கு எந்த விவரங்களையும் தெரியப்படுத்தவில்லை. ஆனால், இப்போது மத்திய அரசுக்கு எல்லாம் தெரியும் என்று சொல்கிறீர்கள். எல்லாம் தெரியும் என்றால், அதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி இருக்க வேண்டும். ஏன் மவுனமாக மத்திய அரசு இருந்தது?
விவரங்கள் எதையும் வெளியில் மத்திய அரசு சொல்லவில்லை. இதற்கு என்ன காரணம் என்பது மத்திய அரசுக்கு மட்டும் தான் தெரியும். ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது எந்த தகவலும் சொல்லவில்லை. இப்போது இறந்த பின்னரும் எந்த உண்மையும் வெளியில் சொல்லவில்லை. அப்படி என்றால், பிணத்தை தோண்டி எடுத்து சோதித்தால் தான் உண்மை வெளியில் வருமா? என கேள்வி எழுப்பினார்.
பின்னர், இந்த வழக்கு விசா ரணையை வரும் ஜனவரி 9ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், இந்திய பிரதமர் அலுவலகம், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சகம், மத்திய உள்துறை செயலாளர், மத்திய சட்டம் அமைச்சகம், சி.பி.ஐ. இயக்குனர், தமிழக தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் உள்ளிட் டோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.