
பி.எச்.பாண்டியன் மற்றும் அவரது மகன் மனோஜ் பாண்டியன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பல பகீர் தகவல்களை தெரிவித்தனர்.
அடுத்தடுத்து குற்றச்சாட்டுகளை அடுக்கி கொணட வந்த பி.எச்.பாண்டியன், ஜெயலலிதா மரணம் குறித்து பகீர் சந்தேகங்களை எழுப்பினார். ஜெயலலிதாவுக்கு ஸ்லோ பாய்சன் கொடுக்கப்பட்டு இருக்குமோ என்பதை ஒரு மும்பை சம்பவத்தை எடுத்துக்காட்டாக கூறினார்.
மும்பையை சேர்ந்த லட்சுமிபாய் என்ற மிகப்பெரிய பணக்கார பெண்ணை , அவரது சொந்தக்காரர்கள் சிலர் “அன் டிடெக்டபுள் ஸ் லோ பாய்சன்” மூலம் கொன்றனர்.
அதாவது மும்பையில் இருந்து அவர் டெல்லி செல்வதற்குள், அந்த பெண்மணி இறந்துவிட்டார். ஆனால், அவரது உடலில் எந்த விஷமும் கண்டெடுக்கப்படவில்லை. பின்னர் அதை தீர விசாரித்த நீதிபதி, தீவிர விசாரணைக்கு பிறகு, குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஆயுள் தண்டைனை விதித்து தீர்ப்பளித்தார்.
இதுபோன்ற உதாரணங்களை நான் நேரில் பார்த்தவன் என்ற முறையில், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் இதுபோன்று சம்பவம் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது என பி.எச். பாண்டியன் கூறினார்.
கிரிமினாலஜி வாழக்கறிஞரான நான், சென்னை மருத்துவ கல்லூரியில் “கிரிமினாலஜி மற்றும் பாரன்சிக் எனப்படும் தடயவியல் துறையில் 2 ஆண்டு நிபுணத்துவம் பெற்றவன்” என தெரிவித்தார்.
மறைந்த ஜெயலலிதாவுக்கு “ஸ்லோ பாய்சன்” கொடுக்கப்பட்டு இருக்கிறதா என்ற பி.எச்.பாண்டியனின் சந்தேகம், அரசியல் வட்டாரத்தில் சூட்டை கிளப்பியுள்ளது.