
ஜெயலலிதா மறைந்தவுடன், சசிகலா கண்ணில் ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவல்லை என பி.எச். பாண்டியன் சரமாரியாக புகார் கூறினார்.
ஜெயலலிதா மரணம் அடைந்தவுடன், 150 பேருடன், ஜேம்ஸ் பாண்டு கோட்டு போட்டு கொண்டு சசிகலா நடந்து வந்தார். அவரது கண்ணில் ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவில்லை.
73 நாட்களும் ஐசியு வார்டுக்கு வெளியே தான், நான் உட்கார்ந்து இருந்தேன். அங்கு தொடர்ந்து திட்டமிட்ட நாடகம் தான் அறங்கேறியது.
5ம் தேதி அம்மாவுக்கு கார்டியாக் அரஸ்ட் ஏற்பட்டது என சொன்னார்கள். அப்போது, அங்கு வந்த அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி.ரெட்டி மட்டும் சாரி என்று மட்டும் சொல்லிவிட்டு சென்றார்.
சசிகலா குடும்பத்தினர் தவிர்த்து, வேறு யாரையுமே, ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கவில்லை. நாங்கள் எல்லாம், அம்மாவின் அருகில் செல்லக்கூடாது என கவனமாக இருந்ததாக பி.எச். பாண்டியன் தெரிவித்தார்.
ராஜாஜி ஹாலில் அம்மாவின் உடல் கிடத்தப்பட்ட போது, சுற்றி இருந்த காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். 2011ம் ஆண்டு, அம்மாவுக்கு எதிராக சதி செய்தவர்கள் என அம்மாவே குறிப்பிட்ட அனைவரும், உடல் அருகே நின்றிருந்தது அதிர்ச்சியடைய செய்தது.
ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போதே, முதலமைச்சர் பதவியை யார் கைப்பற்றுவது என்ற சசிகலா குடும்பத்தினரின், வாக்குவாதத்தை தெரிந்து கொண்ட பின்னர்தான், ஜெயலலிதா இவர்களை கட்சியில் இருந்து விரட்டினார்.
ஜெயலலிதாவின் கல்லறையில் ஈரம் கூட காயாத நிலையில், கட்சியில் எத்தனையோ தகுதி வாய்ந்த நபர்கள் இருந்தும், ஜால்ராக்களை விட்டு, அவர்தான் தகுதியானவர் போல பேசி, அதை ஜெயலலிதாவின்தாவின் டிவியிலேயே ஒளிபரப்ப செய்தனர்.