
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள், அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மூத்த நிர்வாகிகள் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையில் அதிமுகவில் பிளவு ஏற்பட்டு, சசிகலா மற்றும் ஓ.பி.எஸ் என இரு அணிகளாக செயல்படுகின்றன. கூடுதலாக தீபாவின் ஆதரவாளர்களும், களம் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில், நாளை பல்வேறு பகுதிகளில் ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு பாதுகாப்பு கொடுக்க போலீசாருக்கு அனுமதி கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் இரு அணிகள் செயல்படுவதால், கட்சி கொடியை யார் ஏற்றுவது என்பதில், இப்போதே போட்டாபோட்டி துவங்கி உள்ளது.
இரு அணிகளுமே கொடிக்கம்பம் தங்களுக்கு சொந்தம்' என உரிமை கொண்டாடுவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதில் பெரும் குழப்பம் அடைந்துள்ளனர்.
நாளை, பன்னீர்செல்வமும்- தீபாவும் மெரினாவில் உள்ள ஜெயலாலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர். பின்னர் ஜெயலலிதாவின் ஆர்.கே. நகர் தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கி, ஆதரவு திரட்ட திட்டமிட்டுள்ளனர். இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.