
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா, அதிமுக சார்பில் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஜெயலலிதாவின் 69வது பிறந்த நாளையொட்டி, இன்று சென்னை அரசு பன்னோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனையில் 69 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதலமைச்சர் இ.பி.எஸ். தொடங்கி வைத்தார்.
இதைதொடர்ந்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், ஜெயலலிதா உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செய்தார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் மலர் அலங்காரத்துடன் வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதா உருவப்படத்துக்கு அதிமுக துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அவைத் தலைவர் செங்கோட்டையன், முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.
இதையொட்டி விழா மலர் வெளியிடப்பட்டது. திண்டுக்கல் சீனிவாசன் விழா மலரை வெளியிட, பொள்ளாச்சி ஜெயராமன் அதனை பெற்று கொண்டார்.