முழு வீச்சில் களத்தில் குதித்தார் தீபா - சசிகலா எதிர்ப்பு தீவிரமாகும் என அறிவிப்பு

 
Published : Feb 24, 2017, 10:19 AM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
முழு வீச்சில் களத்தில் குதித்தார் தீபா - சசிகலா எதிர்ப்பு தீவிரமாகும் என அறிவிப்பு

சுருக்கம்

ஒரு வழியாக களத்தில் நேரடியாக குதித்து விட்டார் ஜெ. அண்ணன் மகள் தீபா.

தனது வீட்டிற்கருகே புதிய அமைப்பு மற்றும் கட்சிக்கான அலுவலகத்தையும் திறந்து வைத்து விட்டார்.

ஜெயலலிதா பிறந்தநாளான பிப் 24 அன்று தனது அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிடுவதாக நீண்ட நாளாக கூறி வந்தார்.

புதிய அலுவலகம் திறந்திருப்பதன் மூலம் தீபாவின் அரசியல் பிரவேசம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தீபா அலுவலகம் திறந்து வைக்கும்போது அதிமுகவின் ஆயிரக்கணக்கான அதிருப்தி தொண்டர்கள் அங்கு குழுமியிருந்தனர்.

ரிப்பன் வெட்டி தீபாவே அந்த அலுவலகத்தை திறந்து வைத்தார்.

ஜெயலலிதா மறைவு துக்கத்தை அனுசரிக்கும் வகையில் நெற்றியில் போட்டு இடாமல் இருந்த தீபா அலுவலக திறப்பு நிகழ்ச்சிக்கு பொட்டு வைத்து வந்தார்.

துக்கம் அனுஷ்டிக்க தீபா பொட்டு வைக்காமல் இருந்ததால் அவர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டார் என்றும் அவர் கணவரும் கிறிஸ்த்தவராக மாறிவிட்டார் என்றும் தொடர்ந்து தகவல் பரப்பபட்டு வந்தது.

அந்த புரளிக்கும் தற்போது தீபா முற்றுப்புள்ளி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தீபா இப்போதைக்கு ஓபிஎஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள போவதில்லை என்றும் தனியாகத்தான் தனது பயணத்தை தொடங்கவுள்ளார் என்றும் தெரிவித்தார்.

தீபக்குக்கும் தனக்கும் எந்த பிரச்சனையுமில்லை அதனால் தேவையற்ற வதந்திகளை யாரும் கிளப்ப வேண்டாம் என்றும் தீபா கேட்டு கொண்டார்.

இன்று மாலை ஆர்.கே.நகரிலிருந்து தனது சுற்று பயணத்தை துவங்கி தொடர்ந்து தமிழகம் முழுவது செல்வதற்கான திட்டம் வகுக்கப்பட்டு விரைவில் சுற்று பயணம் வரவுள்ளார்.

இதோ அதோ என நேரடி அரசியலில் தீபா குதித்துள்ளது சசிகலா தரப்புக்கு மேலும் நெருக்கடியை கொடுக்குமா? அல்லது சிக்கலில் தவிக்கும் அதிமுக மேலும் எழுச்சி பெறுமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு