
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ம் தேதி காலமானார். இதையடுத்து ஓ.பி.எஸ். பொறுப்பேற்றார். பின்னர், அவர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து இ.பி.எஸ் என முதலமைச்சர்கள் நியமிக்கப்பட்டார்.
எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பொறுப்பேற்றதும், முதல் கையெழுத்தாக 500 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டார். அதை தொடர்ந்து, மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் ஒவ்வொன்றாக செயல்படுத்த தொடங்கியுள்ளார்.
இந்நிலையில், இன்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் மாநிலம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அதிமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
கடந்த சட்டமன்ற கூட்ட தொடரின்போது, ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு, 69 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என கவர்னர் உரையில் குறிபிடப்பட்டு இருந்தது. இதையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 69 லட்சம் மரக்கன்றுகளை நடும் மாபெரும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
சென்னை தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் இன்று 69 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டது.