
சற்றே ஓய்ந்து கிடந்த கமல்ஹாசன் மற்றும் தமிழக அமைச்சர்கள் இடையிலான வார்த்தை போர் இன்று மீண்டும் கிளம்பியிருக்கிறது. அதுவும் எடுத்த எடுப்பிலேயே டாப் கியரில் உச்சம் தொட்டிருக்கிறது. கமலை விளாசியிருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்.
‘ஓர் அரசே திருடுவது குற்றம்தான். ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று. திருடர்கள் இனி நாடாளக்கூடாது....’ என்றெல்லாம் தனது ட்விட்டரில் கமல் ட்விட்டி வைக்க, இன்று பொங்கியிருக்கிறார் ஜெயக்குமார்.
கமலை விமர்சித்து ஜெயா சொன்னவை இதோ...
“அம்மா இருக்கும்போது வாயை மூடிக்கிட்டு, பொத்திக்கிட்டு இருந்த கமல் இப்போது வாய்பேசுகிறார். ‘இந்த நாட்டை விட்டே ஓடுவேன்’ என்று புலம்புபவர் இன்று நாடாளும் மக்களை பலிக்கிறார்.
இவருக்கு ஏன் இந்த சீப் பாப்புலாரிட்டி? சினிமாவில் நடித்து சேர்த்த புகழ் பத்தாதா? அரசியலிலும் அபத்தமாக பேசி பேர் சேர்க்கணுமா?
என்ன குற்றத்தை, திருட்டை கண்டார் அவர்? அதை நிரூபிக்கட்டும். அதை நிரூபித்த பின் பேசட்டும். வீணாக, பொயான குற்றச்சாட்டுக்களை சொல்லிவிட்டு செல்லக்கூடாது. அவர் சொன்ன குற்றச்சாட்டை நிரூபிக்கவில்லையென்றால் நிச்சயம் அவர் மீது வழக்கு போடுவோம். நாங்க எல்லாரும் உப்பு போட்டுத்தான் சாப்பிடுறோம், அவர் மீது வழக்கு நிச்சயம் போடுவோம்.
குணா படத்தில் வருவது போலவே யதார்த்த வாழ்க்கையிலும் கமல் நடந்து கொள்கிறார்.” என்று வறுத்திருக்கிறார்.
இதற்கு....”ஆம் அடியேன் குணா கமலஹாசன் தான். உப்பை உணவிலுட்டு உண்ணும் முறை...”என்றெல்லாம் கமல் கொடுக்கப்போகும் செந்தமிழ் ரியாக்ஷன்களை நினைக்கும்போது அய்யோ சாமி கண்ணைக் கட்டுதே!