விஷச்செடி... 25 வருஷம் தேர்தலில் நிற்க முடியாத அளவுக்கு தடை போடணும்... கதிர் ஆனந்தை காண்டாக்கிய ஜெயக்குமார்...

By sathish kFirst Published Apr 16, 2019, 8:44 PM IST
Highlights

பணம் கொடுப்பவர்கள் அடுத்த 25 ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்க முடியாத அளவுக்கு தடை விதிக்கணும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பணம் கொடுப்பவர்கள் அடுத்த 25 ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்க முடியாத அளவுக்கு தடை விதிக்கணும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் வீடு, கல்லூரி, பள்ளியில் கடந்த மாதம்  வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது முக்கிய ஆவணங்களும், ரூ.10 லட்சம்  கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதை தவிர அவருக்கு சொந்தமான நிறுவனங்களிலும் சோதனை நடந்தது.

இந்த சோதனைகளில் வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டது. மேலும் இந்த தொகுதியில் அளவுக்கு அதிகமான பணம் புழங்குவதாகவும் புகார் எழுந்ததால் அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வந்த நிலையில், தற்போது தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று  ரத்து செய்யப்பட்டு விட்டது. 

இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது; ஜனநாயகத்தை மதிப்பது அதிமுக தான். திண்டுக்கல்லில் தொடங்கி திருமங்கலம் வரை  பல்வேறு தொகுதிகளில் மக்களுக்கு ஆசையை காட்டி வருகிறது திமுக.

வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது யாரால் என்பது நன்றாகவே தெரிகிறது. இந்த அதிரடியா அறிவிப்பு திமுகவுக்கு ஒரு நல்ல பாடம். யார் இந்த பணத்தை கொடுக்கிறார்களோ அவர்கள் போட்டியிடுவதை தடுப்பது என்பது நல்ல விஷயமாக இருக்கும். பணம் பட்டுவாடா செய்யும் வேட்பாளர்கள், அடுத்த 25 ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்க முடியாத அளவுக்கு தடை விதிக்கும் வகையில் விதிமுறைகளில் மாற்றம் செய்தாலும் நன்றாக இருக்கும்.

ஜனநாயகத்தை பணம் கொடுத்து வாங்கி விடலாம் என்று திமுக நினைப்பது ஆரோக்கியமான போக்கு கிடையாது. இந்த தேர்தல் ரத்து செய்தி விஷச் செடியை வேரோடு அழிப்பது போன்ற விஷயம். அதுமட்டுமல்ல சென்னை உள்ளிட்ட பல இடங்களில் இரவோடு இரவாக திமுகவினர் பணம் பட்டுவாடா செய்வதற்கு ஏற்பாடுகள் செய்து அதை நடந்து கொண்டிருக்கின்றன.

திமுகவினர், அமமுக 1000 கோடி, 2000 கோடி அடித்துள்ளனர். ஆனால் மக்களுக்கு கொடுப்பது 100 ரூபாய், 200 ரூபாய் மட்டுமே. இவ்வாறு மக்களை ஆசை காட்டி ஏமாற்றி வருகிறார்கள் என ஜெயக்குமார் ஆக்ரோஷமாக கூறியுள்ளார்.

click me!